பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர்  : தென்னை

அறிவியல் பெயர் : கோக்கோஸ் நியூசிபெரா

வகுப்பு : அரிக்கேல்ஸ்

குடும்பம் : அரிக்கேசியே

பொதுப்பெயர்  : மினான்சி (ஸ்வாகில்லி)

தென்னையின் முக்கியமான பூச்சிகள்

காண்டாமிருக வண்டு: ஓரைடக்ஸ் ரைனோசெரஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சிவப்பு கூன் வண்டு: ரின்கோபோரஸ் பெரன்ஜினியஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தாவரப்பட்டை கூன் வண்டு: டைகேலேன்டிரா ஸ்டிக்மாட்டிகோலிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
மரப்பட்டைத்துளைப்பான்: ஜைலிபோரஸ் பர்வுலஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
கருந்தலைப் புழு – ஒபிசினியா அரினோசெல்லா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
நத்தைப் புழு : பாராசா டிடா லெப்பிடா, கான்திலா ரொட்டன்டா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தென்னை ஸ்கிப்பர் : கங்காரா தைரிசி நவாஸ்டஸ் கிரிமினஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலைப்புழு: டர்னாக்கா அக்கூட்டா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
பைபுழு : மனாத்தா அல்பிபெஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
வெள்ளை வேர்ப்புழு : லூக்கோ போலஸ் கொனியோபோரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
கரையான் : ஓடோன்டோ டெர்மஸ் ஓபிசஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இறகு இறக்கை பூச்சி  : ஸ்டீகானிடிஸ் டைபிக்கஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
செதில் பூச்சி : அஸ்பிடியோடஸ் டெஸ்டிரக்டார் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
மாவுப்பூச்சி: சூடோகாக்கஸ் லாங்கிஸ்பின்னிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தென்னை ஈரியோபிட் கரையான் : ஆசிரியா கர்ரிரோனிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு

 

 
1.காண்டாமிருக வண்டு : ஒரைடக்ஸ் ரைனோசெரஸ்

அறிகுறிகள்

  • நடுக்குருத்து வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும்.
  • நன்றாக வளர்ந்த ஓலைகள் வைரம் போன்ற வடிவில் வெட்டுக்கள் காணப்படும்.
  • நடுக்குருத்தின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் உண்ணப்பட்ட நார்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

பூச்சியின் விபரம்

  • முட்டை : முட்டைவடிவ, பால் வெள்ளை நிற முட்டைகள் உரக்குழிகளில் அல்லது அழுகிய காய்கறிகள் 5 லிருந்து 15 செ.மீ ஆழத்தில் காணப்படும்.
  • புழு: தடித்து, தட்டையாக, ‘C’ வடிவத்தில் மங்கிய பழுப்பு நிறத்திலையுடன் 5 -30 செ.மீ ஆழத்தில் காணப்படும்.
  • கூட்டுப்புழு : மண்கூடுகளில் 0.3-1 மீ ஆழத்தில் காணப்படும்.
  • வண்டு : தடித்து, பழுப்பு கலந்த கருப்ப அல்லது கருப்ப நிற தலையுடன் ஆண் வண்டுகளில் நீளமான கொம்பு தலையிலிருந்து முன்பக்கத்தில் நீட்டிக் கொண்டிருக்கும். பெண் வண்டுகளில் இந்தக் கொம்பு சிறியதாக இருக்கும்.
ஆரம்பநிலை – இளம் தென்னங்கன்றுகள் சேதமடைதல் 
தீவிர தாக்குதல் – ‘V’ வடிவத்தில் சேதமடைதல்

கட்டுப்பாடு :

  • இறந்த மரங்களைத் தோப்புகளிலிருந்து அகற்றி எரித்தவிடல் வேண்டும். ஏனெனில் அவைகள் வண்டினம் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாகிவிடுகிறது.
  • தொழு உரத்தை குழிகளிலிருந்து எடுக்கும் பொது அவற்றிலிரக்கும் புழுக்கள் மற்றம் கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழித்துவிடவெண்டும்.
  • புழுக்களை உண்டு அழிக்கம் பச்கை மஸ்கார்டைன் பூஞ்சாணத்தை (மெட்டாரைசியம் அனிசோபிலியே) எருக்குழிகளில் கலந்து விடவேண்டும். இவ்வகைப் பூஞ்சாணம் அரசு உயிரியல் ஆய்வகங்களில் வளர்க்கப்படுகிறது. இப்பூஞ்சாணம் ஆய்வகத்தில் சோளம் மற்றும் காரட் போன்றவற்றில் வளர்க்கப்படுகிறது.
  • ஒரு கிலோ ஆமணக்குப் புண்ணாக்கினை 5 லிட்டர் தண்ணீரில் மண்பானைகளில் ஊறவைத்து, தோப்புகளில் ஆங்காங்கே வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.
  • பச்சைத் தென்னை மட்டைகளை நீளவாக்கில் பிளந்து அல்லது அழுகிய இளம் தென்னை மரத்தண்டுப் பகுதியினை கள்ளில் நன்குத் தோய்த்து, தோப்புகளில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் வளர்ந்த வண்டகளைக்  கவர்ந்தழிக்கலாம்.
  • ஒவ்வொரு முறையும் தேங்காய் எடுக்கும் தருணத்தில் தென்னை மடல் பகுதிகளை நன்குச் சோதிக்கவேண்டும். அரை மீட்டர் நீளமுள்ள குத்தூசிக் கொண்டு மடல்களுக்கும் குருத்துகளுக்கும் இடையே செருகி, வண்டிருப்பதைச் சோததித்து, இருந்தால் குத்தி எடுத்துவிடவேண்டும்.
  • தென்னங்கன்றுகளில் அடிப்பாகத்தில் பண்ணாடைகளின் உட்பகுதியில் மூன்றரை கிராம் எடையுள்ள மூன்று பூச்சிக்குண்டுகளை (பாச்சை உருண்டைகளை (அ) அந்துப் பூச்சி உருண்டைகளை) ஒரு கன்றுக்கு என்ற அளவில் 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கன்றுகளை வண்டின் தாக்குதலிலிருந்துத் தவிர்க்கலாம்.
  • விளக்குப் பொறியை முதல் கோடைமழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலும் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
  • விளக்குப் பொறியை முதல் கோடை மழை சமயங்களில் மற்றும் பருவமழைக் காலங்களிலம் அமைத்துக் கவர்ந்தழிக்கலாம்.
  • பேக்குலோ நச்சுயிரியும் இவ்வண்டினத்தைத் தாக்கி அழிக்கிறது. இந்நச்சுயிரி உட்செரலத்தப்பட்ட வண்டுகளைத் தோப்புகளில் விடுவதன் மூலம் நச்சுயிரி அடுத்து வரும் சந்ததிகளில் பரவிப் புழுப்பருவத்தில் அழிவை ஏற்படுத்துகிறது. பேக்குளோ நச்சுயிரி நோய் தாக்கிய வண்டுகளை எக்டர் ஒன்றுக்கு 15 வீதம் தோப்புகளில் விடவும்.
  • வேப்பங்கொட்டைத் தூள் அல்லது வேம்பு பருப்புத் தூள் 150 கிராமுடன் இரண்டு மடங்கு மணலைக் கலந்து மடல் பகுதிகளில் உள்ளிருந்த மூன்றாவது மட்டைகளின் அடிப்பகுதியில் பண்ணாடைகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
  • போரெமட 10 சத குருணை மருந்து 5 கிராமை ஒரு சிறிய அடிப்பகுதியில் குண்ட ஊசியால் துளையிட்ட பாலீத்தீன் பையில் எடுத்துககொண்டு அடை மடல் பகுதிகளில் உள்ளிருந்து இரண்டாவது இடைவெளியில் இருமுறை வைப்பதன் மூலம் வண்டுகளால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கலாம்.
  • ரைனோலூர் (Rhinolure) இனக்கவர்ச்சிப் பொளிகளை இரண்டு எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழிக்கவும்.

 


காண்டாமிருக வண்டை எடுக்கப் பயன்படும் இரும்பு கம்பிகள்

 
2.சிவப்பு கூன் வண்டு : ரின்கோபோரஸ் பெரன்ஜினியஸ்

அறிகுறிகள்:

  • அடிமரத்தில் பழுப்பு நிற சாற வடிந்து கொண்டுள்ள துளைகள் காணப்படும்.
  • உள் இலைகள் மஞ்சள் நிறமாதல்
  • நுனிப்பகுதியில் உள்ள நடுக்குருத்து மெதுவாக வாட ஆரம்பிக்கும்.

பூச்சியின் விபரம் :

  • முட்டை : வெள்ளை நிறத்தில் முட்டை வடிவில் இருக்கும்
  • புழு லேசான மஞ்சள்நிற புழுக்கள் கால்கள் இல்லாமல் காணப்படும்.
  • வண்டு : சிவப்பு கலந்த பழுப்பு நிற வண்டுகளின் மார்புப்பகுதியில் ஆறு அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகளில் தெளிவான நீளமான முகத்துடன், கொத்தான முடியுடன் காணப்படும்.

 

கூட்டுப்புழு
கூட்டிலிருந்து வண்டு வெளியே வருதல்   
   வண்டு
 பழுப்பு நிற திரவம் வடிதல்
நோயின் கடைசி நிலையில் நடுக்குருத்துக்கள் வாடல்   
ஆரம்ப நிலை – இலை சேதம்

கட்டுப்பாடு :

  • காண்டாமிருக வண்டுகள் தாக்குதலுக்கு இல்ககான மரங்களை இவ்வண்டுகள் எளிதில் தாக்குகின்றன. எனவே காண்டாமிருக வண்டுகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • காய்ந்த மற்றும் சேதம் அடைந்த மரங்களின் பகுதிகள் மற்றும் இறந்த மரங்களை அகற்றி அழித்து வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கவேண்டும்.
  • மரத்தில் சேதம் ஏற்படாமல் மடிந்த வரை பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு சேதம் ஏற்பட்டால் சிமெண்ட் கொண்டு அவற்றை அடைத்து இவ்வண்டுக்ள முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
  • பச்சை மட்டைகளைவெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
  • மட்டை இடுக்ககுளில் காணப்படும் கூன் வண்படுபளைப் பிடித்து அழித்துவிடவேண்டும். மரததின் குருத்துப் புகுதிகளிலும் மற்றும் மேலுள்ள மூன்று மட்டைகளில் அடிப்பகுதியிலும், மண்ல் மற்றும் வேப்பங்கொட்டைத்தூள் அல்லது வேம்புபருப்புத் தூளை (2:1) அல்லது லிண்டேன் 1.3 சதத் தூளுடன் 1:1 என்ற அளவில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடுவதல் இப்பூச்சியின் முட்டை இடுவது தடுக்கப்பட்டு, தாக்குதலைக் குறைக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு கரும்புச் சர்க்கரைப்பாகு (Molasses) 2.5 கிலோ (அ) கள் 2.5 லிட்டர் + அசிடிக் அமிலம் 5 மில்லி + ஈஸ்ட் மாத்திரை 5 கிராம் இவற்றுடன் முப்பது தென்னை மட்டைகளை நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கிசத் சேர்த்து தோப்புகளில் வைத்து கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • கூன் வண்டுகளைக் கவர்ந்து ஈர்க்கும் பெரோலியூர் (Ferrolure) எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை 2 எக்டருக்கு ஒன்று வீதம் தோப்புகளில் வைத்து வண்டகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கவும்.
  • கூன் வண்டின தாக்குதலைத் தவிர்க்க தோப்பைத்  துப்புரவாக வைப்பது மிகவும்  அவசியம்.
  • வேர் மூலம் மோனோகுரோட்டோபாஸ் மருந்தை 10 மில்லி + 10 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 3 தடவைச் செலுத்தவும்.
வாளியுடன் இனக்கவர்ச்சிப்பொறி 
சிவப்பு கூன் வண்டு மற்றும் காண்டாமிருக வண்டை வாராவாரம் பிடித்தல்

வேர்வழி ஊட்டம்:

  • புதிய வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • வேரை ஒரு பகுதியில் வெட்டி, பூச்சிக் கொல்லி கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 10 மிலிஐ ஒரு பாலித்தீன் பையில் இட்டு, வேரை இந்த கரைசலின் உள்ளே விடவும்.
  • பின் இந்தப்பையை பந்து நூலால் இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.
  • 24 மணி நேரததிற்கு பிறகு, கரைசல் உறிஞ்சப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இந்த முறை பொதுவாக பயன்படுத்தப்படும் முறை அல்ல. நோயின் தாக்கம் மிக அதிகமாகும் போது, மரம் உயிர் வாழ முடியாத நிலையை அடையும் போது மட்டுமே இந்த முறையை பயன்படுத்த வேண்டும்.
 
3.தாவரப்பட்டை வண்டு : டைகேலேண்டிரா ஸ்டிக்மேட்டிகோலிஸ்

அறிகுறிகள்:

  • இலைக் காம்புகள் மற்றும் அடிமரத்தில் உள்ள வெட்டுக்களில் சிவப்பு நிறமாக மாறுதல்.
  • மரங்களின் தண்டுகளில் சாறு வடிந்து காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • வண்டு : சிறியதாக, கருப்பு நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு :

 

  • தண்டு வழியாக 0.2 % பென்தியான் (அ) 0.2% டைகுளோர்வாஸ் கரைசலை துளையின் வழியாக திரும்ப திரும்ப உட்செலுத்த வேண்டும்.

 

 
4. பட்டைத் துளைப்பான் : ஜைலிபோரஸ் பர்வுலஸ்

அறிகுறிகள் :

  • எண்ணற்ற மிகச்சிறிய துளைகள், நார்கள் சுற்றி காணப்படும்.

பூச்சியின் விபரம் :

  • வண்டு : சிறியதாக, பழுப்பு நிறத்தில் இருக்கும்
II. இலை உண்பவை :
5. கருந்தலைப் புழு : ஓபிசினியா அரினோசெல்லா

அறிகுறிகள்:

  • கீழ்ப்புறத்தில் இலைகளின் இலைப்பரப்பில் காய்ந்து திட்டுக்கள் காணப்படும்.
  • இலைப்பரப்பின் அடிப்பகுதியில் பட்டு போன்று நார்களின் கூடு காணப்படும்.

பூச்சியின் விபரம் :

  • புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தில், அடர் பழுப்பு நிற தலை மற்றும் முன் மார்புடன், சிவப்ப நடு மார்புடன் காணப்படும். உடலில் பழுப்பு நிற வரிகள் காணப்படும்.
  • கூட்டுப் புழு : பட்டு போன்ற கூட்டின் வலையின் உள்ளே காணப்படும்.
  • பூச்சி : சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்.
    பெண்பூச்சி : நீளமான உணர் கொம்பு மற்றும் மூன்று மங்கிய புள்ளிகள் முன் இறக்கையில் காணப்படும்.
    ஆண்பூச்சி : பின் இறக்கையில் மயிரிழைகள் முன்பகுதியிலிருந்து பின்பகுதி வரை காணப்படும்.

கட்டுப்பாடு :

  • இப்பூச்சியின் தாக்குதல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலும் மற்றும் பருவமழைக்குப்பின் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக் காணப்படும். தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் தாக்கும்.
  • கோடைக்காலத்தில், கருந்தலைப்புழுக்களின் உற்பத்தி அதிகமாக்க காணப்பட்டால் எக்டருக்கு ஒட்டுண்ணிகளான பெத்திலிட் 3000 என்ற அளவிலும் மற்றும் பிரகோனிட் 4500 என்ற அளவில் விடவேண்டும். ஒட்டுண்ணி பொறி மூலம் ஒட்டுண்ணிகளை மரத்தில் விடவேண்டும். ஒட்டுண்ணிகளை மரத்தின் உச்சியில் (மட்டைகளுக்க இடையில் ) விடக்கூடாது.
  • இலைகளில் கருந்தலைப்புழு முதல் இரு நிலைகளில் காணப்பட்டால், எக்டருக்கு பெத்திலிட் என்ற புழு ஒட்டுண்ணியை 3000 அல்லது 1:8 (கருந்தலைப்புழு ஒட்டுண்ணி) என்ற அளவில் விடவேண்டும்.
  • தாக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்துவிடவேண்டும்.
  • இளமரங்களில், கருந்தலைப்புழுக்களின் சேதம் காணப்பட்டால், மாலத்தியான் 50 சதம் ஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கலாம்.

வேர் ஊட்டம்

  • புதிய வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • வேரை ஒரு பகுதியில் வெட்டி, பூச்சிக் கொல்லி கரைசலான மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 10 மிலிஐ ஒரு பாலித்தீன் பையில் இட்டு, வேரை இந்த கரைசலின் உள்ளே விடவும்.
  • பின் இந்தப்பையை பந்து நூலால் இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.
  • 24 மணி நேரததிற்கு பிறகு, கரைசல் உறிஞ்சப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், வேறு ஒரு வேர்ப்பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இந்த முறை பொதுவாக பயன்படுத்தப்படும் முறை அல்ல. நோயின் தாக்கம் மிக அதிகமாகும் போது, மரம் உயிர் வாழ முடியாத நிலையை அடையும் போது மட்டுமே இந்த முறையை பயன்படுத்த வேண்டும்.
 
6. நத்தைப் புழு : பாராஸா லெப்பிடிடா, கான்திலா ரொட்டண்டா

அறிகுறிகள் :

  • எண்ணற்ற மிகச்சிறிய துளைகள், நார்கள் சுற்றி காணப்படும்.

பூச்சியின் விபரம் :

  • வண்டு : சிறியதாக, பழுப்பு நிறத்தில் இருக்கும்

அறிகுறிகள் : இலைகள் உதிரும்

பாராஸா லெப்பிடா

  • முட்டை : தட்டையாக, பளப்பளப்பான முட்டைகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும்.
  • புழு : பச்சை நிற உடலுடன் வெள்ளை நிற வரிகளுடன், 4 வரிசை சிவப்பு (அ) கருப்பு நிற முள் போன்று காணப்படும். இது உடலில் அரிப்பு மற்றும் வலி ஏற்படும்.
  • கூட்டுப்புழு: நெருக்கமான நீள்வடிவில் சாக்லெட் பழுப்பு நிற கூட்டுடன், அடிப்புறத்தில் தட்டையாகவும் மேற்புறத்தில் குவிந்தும் காணப்படும். கூட்டிலும் அரிப்பு ஏற்படுத்தக்கூடிய முள் மற்றும் முடிகள் காணப்படும்.
  • பூச்சி : பச்சை நிற இறக்கைகளுடன், அடர் நிற திட்டு முன்இறக்கையின் அடிப்புறத்தில் காணப்படும்.

கா.ரொட்டண்டா

  • புழு : கருப்பு (அ) சாம்பல் நிற மேல்பகுதியில் காணப்படும்.
  • பூச்சி : சிறியதாக, சாம்பல் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். முன் இறக்கைகள் அடர் நிறத்தில், நிறைய கருப்பு நிற முனையுடன் காணப்படும். பின் இறக்கையில் சிறிதளவு அடர்நிறத்தில் காணப்படும்.
கட்டுப்பாடு :
  • இப்பூச்சியினால் தாக்கப்பட்ட கீழ்வரிசையில் உள்ள மட்டைகள வெட்டி,  அவற்றைத் தோப்பிலிருந்து அப்புறப்படுத்தி, தீவைத்து எரித்து அழிக்கவேண்டும்.
  • புழுக்கள் அதிகம் தாக்கப்பட்டத் தென்னை தோப்புகளில் டிராக்டரில் பொருத்தப்பட்ட அதிக விசையுள்ள மருந்து தெளிப்பான் கருவி கொண்டு, டைக்குளோர்வாஸ் 2 மில்லி அல்லது மீதைலடெமட்டான் 25இசி 4 மில்லி அல்லது கஎரை அசோபாஸ் 5  மில்லி அல்லது பேசில்லஸ் துரண்ஜியன்சிஸ் பாக்டீரியா 2 கிராம் மருந்ததினை ஒரு லிட்டர் தண்ணீருட்ன ஒட்டுத்திரவம் (டீபால்) 0.5 மில்லி கலந்துத் தெளித்தோ அல்லது மரம் ஒன்றுக்கு மோனோகுரோட்டாபாஸ் மருந்து 15 மில்லியுடன்  15 மில்லி தண்ணீர்க் கலந்து வேர் மூலம் செலத்திக்கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செலுத்தப்படும்  மரங்களில், 45 நாட்களுக்கு இளநீர் மற்றும் தேங்காய் பறித்தலைத்தவிர்க்கவேண்டும்.
  • எரிப்பூச்சியின் புழுக்களைத் தாக்கி அழிக்கும் கேந்திகேனோ வகை இரைவிழுங்கி நாவாயப்பூச்சி, சில இடங்களில் இயற்கையில் காணப்படுகிறது. இவைத் தென்படும் தோப்புகளில்  மருந்தத்  தெளிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இந்நாவாய்ப்பூச்சிகள் பெருகி, நத்தைப்புழுக்களின் சாற்றை உறிஞ்சி இயற்கையாகவே கட்டுப்படுத்தும்.
 
7. தென்னை ஸ்கிப்பர் : கங்காரா தைரிஸிஸ், சூவாஸ்டஸ் கிரிமினஸ்

அறிகுறிகள் :

  • இலையின் நுனிகள் சுருண்டு காணப்படும்.

கட்டுப்பாடு :

  • முதிர்ச்சி அடையாத பூச்சிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
  • கார்பைரில் 50 wp 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 10 மிலி+ 10 மிலி நீர் கலந்து 45 நாட்கள் இடைவெளியில், ஒருமுறை வேர் வழியாக செலுத்த வேண்டும்.
  • விளக்குப் பொறிகள் வைத்துக் கட்டுப்படுத்தலாம்.
  • டைகுளோர்வாஸ் 76 wsc 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

 

பூச்சியின் விபரம் :

கங்காரா தைரிஸிஸ்
  • புழு: மங்கிய பச்சை நிறத்தில், சிவப்புநிறக் குறிகளுடன் காணப்படும். உடல் முழுவதும் மெழுகு போன்ற குறிகளுடன் மூடி காணப்படும்.
  • பூச்சி : பழுப்பு நிறத்தில் காணப்படும். சாக்லெட் பழுப்பு நிற இறக்கைகளுடன் மஞ்சள் நிற புள்ளிகளுடன் காணப்படும்.
சூவாஸ்டஸ் கிரிமியஸ் :
அறிகுறிகள் :
  • இலை பரப்பின் ஒரு பகுதி வெட்டுப்பட்டு, கூடு போன்று சுருண்டு காணப்படும்.
பூச்சியின் விபரம் :
  • புழு : மென்மையாக, பச்சை நிறத்தில், உடலுக்கும், தலைக்கும் இடையில் தடுப்பு ஏற்பட்டு, ஏதாவது ஒரு கடைசிப்பகுதியில் நீண்டிருக்கும்.
  • பூச்சி : சாக்லெட் பழுப்பு நிறத்தில், முன்இறக்கையில் மஞ்சள் நிற புள்ளிகளுடன் காணப்படும்.
 
8.இலைப் புழு : டர்னாகா அக்கூட்டா

அறிகுறிகள்:

  • இலைப்பரப்பு முழுவதும் உண்டு, குச்சிகள் மட்டும் காணப்படும்.
பூச்சியின் விபரம்
  • புழு : பழுப்பு நிறத்தில், 2 இளஞ்சிவப்பு நிற வரிகள் காணப்படும். இவை பின் பச்சை நிறத்தில் மாறும்.
  • பூச்சி : மங்கிய வெள்ளை நிறமாக இருக்கும்.
கட்டுப்பாடு :

  • முதிர்ச்சி அடையாத பூச்சிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
  • கார்பைரில் 50 wp 2 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 10 மிலி+ 10 மிலி நீர் கலந்து 45 நாட்கள் இடைவெளியில், ஒருமுறை வேர் வழியாக செலுத்த வேண்டும்.
  • விளக்குப் பொறிகள் வைத்துக் கட்டுப்படுத்தலாம்.
  • டைகுளோர்வாஸ் 76 wsc 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
 
10. வெள்ளை வேர்ப்புழு : லூக்கோ போலிஸ் கொனியோபோரா

அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல்
  • முதிர்வதற்கு முன்பே தென்னங்குலைகள் உதிரும்
  • பூப்பது தாமதமாகும்
  • மரத்தின் அடிப்பகுதியை தோண்டினால் வெள்ளை வேர்ப்புழுக்கள் காணப்படும்

பூச்சியின் விபரம் :

  • பழுப்பு நிறத்தில், நேரான இறக்கைகள், வயிற்றுப் பகுதி முழுவதும் மூடாமல் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • பூச்சிகளை சேகரித்து, அழிக்க வேண்டும், வேம்பு, எய்லாந்திஸ், அகேசியா மரங்களில் மழை பெய்யும் காலங்களில் இந்த பூச்சிகள் கவரப்படும்.
  • வேம்பு கொம்புகள் இலைகளுடன் தென்னந்தோப்புகளில் மலை பெய்தபின் நட்டு வைக்க வேண்டும்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும் (அ) தீ மூட்ட வேண்டும்.

மண் அளிப்பு முறை:

  • மாலத்தியான் 5 டி 25 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் பயிரிடும் சமயத்தில் மண் வழியாக அளிக்க வேண்டும்.
 
11.கரையான் : ஒடோன்டோடெர்மஸ் ஒபிசஸ்
அறிகுறிகள்:
  • நாற்றுக்கள் வாடும்
  • மரத்தின் அடிப்பகுதியில் மண் மற்றும் நார்கள் சூழ்ந்திருக்கும்.

பூச்சியின் விபரம் :

  • பூச்சி : பால் வெள்ளை நிறத்தில், சிறிய அளவில் எறும்புகள் போன்று அடர்நிற தலையுடன் காணப்படும்.

 

கட்டுப்பாடு :

  • தென்னை தோப்புகளுக்கு அருகாமையில் காணப்படும் கரையான் புற்றுக்களைக் கண்டறிந்து அழிக்கவும்.
  • வேப்பம் எண்ணெய் 5 சதம் மருந்துக் கரைசலை மரங்களின் அடிப்பாகத்தில் 2 அடி உயரத்திற்குத் தடவவும்.
  • குளோர்பயிரிபாஸ் மருந்து 3 மில்லி ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • தென்னை மட்டைகளை சேமித்து வைக்க கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றிளைத் தெளிக்கவும்.
  • தாமிரக் கரைசல் 1 சதம் (காப்பர் சல்பேட்)
  • முந்திரிக்கொட்டை எண்ணெய் 80 சதம்
  • வேப்பெண்ணெய் 50 மில்லி / லிட்டர் தண்ணீர்
  • வேப்பங்கொட்டைச்சாறு 200 கிராம் / லிட்டர் தண்ணீர்
 
12. இறகு இறக்கை பூச்சி : ஸ்டிபேனிடிஸ் டைபிக்கஸ்

அறிகுறிகள் :

  • இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • இளம் பூச்சி : வெள்ளை நிறத்தில், அடர்நிற திட்டுக்களுடன் காணப்படும்.
  • பூச்சி : வெள்ளை நிறத்தில், இறக்கைகள் வலை போன்று காணப்படும்.

கட்டுப்பாடு :

  • இலைகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • மாலத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர்
  • டைமெத்தோயேட் 30 கிகி1மிலி/லிட்டர்
  • மீத்தைல் டெமட்டான் 25கிகி 1மிலி /லிட்டர்
  • மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 1 மிலி/லிட்டர்
  • பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 25மிலி/லிட்டர்
  • மீத்தோமில் 25 கி.கி 2 மிலி/லிட்டர்
  • வேப்ப எண்ணெய் 3% தெளிக்க வேண்டும்
 
13.செதில் பூச்சி : அஸ்பிடியோடஸ் டெஸ்டர்க்டார்

அறிகுறிகள்:

  • திட்டுக்களாக மஞ்சள் நிறமடைதல், பின் இவை ஒன்று சேர்ந்துவிடுகின்றன

பூச்சியின் விபரம் :

  • இளம் பூச்சி : வட்ட வடிவ மெழுகு போன்ற சாறு மூடியிருக்கும்.

கட்டுப்பாடு :

  • இளநீர் மற்றும் முதிர்ந்த தென்னய்காய்களைப் பறித்து விட்டு மானோகுரோட்டாபாஸ் 36 இசி ஒரு மில்லி அல்லமு டைமித்தோயெட் 30 இசி  1.25 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட காய்களின் மேல் தெளிக்கவும்.
  • மருந்த தெளித்த 45 சாட்கள் கழித்து இளநீர் மற்றம்காய்களைப் பறிக்கவும். மீன் எண்ணெய் சோப்புக் கரைசலை 2.5 சதம் தெளிக்கவும்.
தென்னங் குலைகளில் செதில் பூச்சிகள்    
 இலைகளில் செதில் பூச்சிகள்
 
14. மாவுப்பூச்சி : சூடோகாக்கஸ் லாங்கிபென்னிஸ்

அறிகுறிகள் :

  • ஒரு இலைகள் குட்டை வளர்ச்சியுடன், உருமாறி, வெளிவராமல் இருக்கும். தென்னங் குரும்பைகள் உதிரும்.
 
15. தென்னை ஈரியோபிட் கரையான் : ஆசிரியா கர்ரோரோனிஸ்

அறிகுறிகள்:

  • முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும்.
  • காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும்.
  • தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும்.
  • உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும்.

பூச்சியின் விபரம் :

  • இளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும்.
இளம் காய்களில் (அ) குரும்பைகளில் சேதம்  
காய்களில் ஈரியோபிட் கரையானால் சேதம்

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி 
வேர் ஊட்டம்
தென்னை டானிக் பயன்படுத்தி வேர் ஊட்டம் 

கட்டுப்பாடு :

  • யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரேட்ஆப் பொட்டாஷ் 3.5 கிலோ/தென்னை மரம்/வருடம்
  • வேப்பங்கட்டி 5 கிலோ மற்றும் அங்கக உரம் 5 கிலோ/தென்னை மரம்/ வருடம்
  • போராக்ஸ் 50 கிராம் + ஜிப்சம் 1 கிலோ + மாங்கனீசு சல்பேட் 0.5 கிலோ /தென்னை மரம் / வருடம்
  • ஊடுபயிராக சணப்பையை 4 பயிர்கள் /வருடத்திற்கு பயிரிடலாம். காற்றுத் தடுப்பு தாவரமாகி சவுக்கை தென்னந்தோப்பு சுற்றிலும் நடலாம்.
  • டிரைகோவாஸ் 40 கிகி 5 மிலி /லிட்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 2மிலி/லிட்டர்  வேம்பு கரைசல் 1% 5மிலி/லிட்டர் கலந்து குறிப்பிட்ட இடத்தில் அளிக்க வேண்டும்.

வேர் ஊட்டம் :

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக வெளியீடான அக்ரோ பையோசைட் 30மிலி/மரம் என்ற அளவில் வேர் ஊட்டம் செய்ய வேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 36 wsc 15 மிலி. (அ) டிரைஅசோபாஸ் 40 கிகி 15 மிலி (அ) கார்டோப்யூரான் 25 கிகி 15 மிலி/15மிலி நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • வேர் ஊட்டம் செய்தவுடன், 45 நாட்கள் கழித்து அடுத்த அறுவடை செய்ய வேண்டும்.

குறிப்பு : வேர் ஊட்டம் செய்வதற்குள் காய்களை பறித்து விட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014