பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வைர முதுகு அந்துப்பூச்சி, புருட்டெல்லா ஸைலோஸ்டெல்லா
இலைப்பிணைக்கும் புழு, குரோசிடோலோமியா பைநோட்டாலிஸ்
கடுகு குளவி, அத்தேலியா லூஜென்ஸ் ப்ராக்ஸிமா
முட்டைகோஸ் துளைப்பான், ஹெலுலா அன்டாலிஸ்
சுருள் பூச்சி, குரோமேட்டோமையா கார்டிகோலா
கடுகு அசுவினி, லையாபிஸ் எரிசிமி
வர்ணமயமான நாவாய்பூச்சி, பார்கிராடா கில்லரரிஸ்

 

1. வைர முதுகு அந்துப்பூச்சி, புருட்டெல்லா ஸைலோஸ்டெல்லா

Crop Protection Mustard தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்.
  • தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்.
  • வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது.
Crop Protection Mustard பூச்சியின் அடையாளம்
  • புழு - புழுக்கள் இளம் பச்சை நிறத்திலிருக்கும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில்  வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இறக்கைகளை மடக்கி அமர்ந்திருக்கும் போது வைரம் போன்ற புள்ளிகள் முதுகு புறத்தில் இருப்பதைக் காணலாம்.

கட்டுப்படுத்தும் முறை

  • இனக்கவர்ச்சி பொறியை ஏக்கர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
  • புழுக்களை சேகரித்து அகற்ற வேண்டும்.
  • கோட்டீசியா புருட்டெல்லா மற்றும் டைடெக்மா செமிகிளைசம் போன்ற ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி வைரமுதுகு அந்துப் பூச்சியை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • வளர்ச்சியடைந்த புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் தூவி புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
 

2. இலைப்பிணைக்கும் புழு, குரோசிடோலோமியா பைநோட்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்.
  • தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத் திட்டுகள் காணப்படும்.
  • வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது.
பூச்சியின் அடையாளம்
  • புழு - புழுக்கள் இளம் பச்சை நிறத்திலிருக்கும்.
  • அந்துப் பூச்சி - அந்துப்பூச்சி சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இறக்கைகளை மடங்கி அமர்ந்திருக்கும் போது வைரம் போன்ற புள்ளிகள் முதுகு புறத்தில் இருப்பதை காணலரம்.
35

கட்டுப்படுத்தும் முறை

  • இனக்கவர்ச்சி பொறியை ஏக்கர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
  • புழுக்களை சேகரித்து அகற்ற வேண்டும்.
  • கோட்டீசியா புருட்டெல்லா மற்றும் டைடெக்மா செமிகிளைசம் போன்ற ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி வைரமுதுகு அந்துப்பூச்சியை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • வளர்ச்சியடைந்த புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் தூவி புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
 

3. கடுகு குளவி, அத்தேலியா லூஜென்ஸ் ப்ராக்ஸிமா

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலையை உண்டு சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட இலைகளில் சிறிய வளைகள் காணப்படும்.
  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்.

 

பூச்சியின் அடையாளம்
  • புழு - பழுப்பு நிறத்தில், உருண்டை வடிவில் இருக்கும். தலையை அடுத்து மார்பு பகுதியில் மூன்று இணைக் கால்களும், வயிற்றுப் பகுதியில் ஏழு இணைக்கால்களும் காணப்படும்.
  • குளவி - தலையும் உடலும் பழுப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுப்பகுதி ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பெண் அந்துப்பூச்சியின் முட்டையிடும் உறுப்பு இரம்பம் போல் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • கோடை காலங்களில் நிலத்தை உழவு செய்து கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
  • வயலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தாக்கப்பட்ட பகுதிகளையும், புழுவையும் சேகரித்து அகற்ற வேண்டும்.
  • இயற்கை எதிரியான பெரிலிஸ்ஸஸ் சின்குலேட்டர்யை பயன்படுத்தி கடுகு குளவியை அழிக்கலாம்.
  • மாலத்தியான் 1000 மிலி மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பாகற்காய் விதையிலிருந்து பெறப்பட்ட எண்ணெய்யை ஊன்தடுப்பான்களாக பயன்படுத்தலாம்.
 

4. முட்டைகோஸ் துளைப்பான், ஹெலுலா அன்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழுக்கள் இலையைத் தின்று சேதப்படுத்தும்.
  • வளர்ச்சியடைந்த புழு இலை மற்றும் தண்டுகளைத் துளைத்து உட்சென்று சேதப்படுத்தும்.

பூச்சியின் அடையாளம்

  • புழு - புழுக்கள் பழுப்புநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் ஏழு ஊதா வண்ணக்கோடுகள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கையில் பழுப்புநிற கோடுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
  • நன்கு வளர்ச்சியடைந்த புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் துவி தாக்குதலைக் குறைக்கலாம்.
 

5. சுருள் பூச்சி, குரோமேட்டோமையா கார்டிகோலா

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலையின் மேல் கோணவாட்டில் மெல்லிய கோடுகளை உண்டு பண்ணும்.

பூச்சியின் அடையாளம்

  • புழு - வெள்ளை நிறமாகவும், தலையில்லாமலும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளிக்கவும்.
 

6. கடுகு அசுவினி, லையாபிஸ் எரிசிமி

கட்டுபடுத்தும் முறை

  • பூச்சியின் தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய இரகங்களான ஜே.எம் - 1 மற்றும் ஆர்.கே.9501 ஆகியவற்றை பயிரிடலாம்.
  • தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை சேகரித்து அகற்றி விட வேண்டும்.
  • கீழ்காணும் இயற்கை எதிரிகளை பயன்படுத்தி அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.
(i). காக்ஸ்நெலா செப்டம்புன்ஸ்டேட்டா
(ii). மானோகிலியஸ் செக்ஸ்மாக்குலேட்டா
(iii). கிரைசோபெர்லா கார்னியர
(iv). கிப்போடோமியா வேரிகேட்டா
  • பூச்சிகளைத் தாக்கும் பூஞ்சைகளான செப்போலாஸ்போரியம், வெர்டிசிலியம் லெகானி போன்றவற்றை பயன்படுத்தி அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் டைமீத்தேயேட் அல்லது மெதில் டெமட்டான் மருந்தை எக்டர்க்கு 625 - 1000 மிலி கலந்து தெளிக்கவும்.
 

7. வர்ணமயமான நாவாய்பூச்சி, பார்கிராடா கில்லரரிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு இலையைத் தாக்கி சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட இளம் செடிகள் காய்ந்து விடும்.
  • நன்கு வளர்ச்சியடைந்த காயினைத் துளைத்து செல்கிறது.
  • பூச்சி காயின் மேல் பசை போன்ற திரவத்தைச் சுரக்க செய்கிறது.

பூச்சியின் அடையாளம்

  • நாவாய் பூச்சி கருமை நிறமாகவும், சிகப்பு மற்றும் மஞ்சள் வரிகளைக் கொண்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • நிலத்தை ஆழமாக உழுது நாவாய்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
  • முந்தைய பருவங்களில் விதைத்து இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • அறுவடை செய்தவுடனே கதிரடித்தல் மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • நாவாய்பூச்சிகள் இலைகளிலும் தண்டுகளிலும் கூட்டமாக காணப்படும். இதனால் இவற்றை சேகரித்து அழிக்கலாம்.
  • அலோபோரா போன்ற இயற்கை எதிரியை பயன்படுத்தி நாவாய்ப்பூச்சியை அழிக்கலாம்.
  • மாலத்தியான் 1000 மிலி மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014