பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய்த்துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா பொதுப்பெயர் : குசம்பப்பூ

அறிவியல் பெயர் : கார்தாமஸ் டிங்டோரியஸ்

குடும்பம் : கம்போஸிடே

சேம்பப்பூ அசுவினி, யுரோலூகான் கார்த்தாமி
குசம்பப்பூ புழு, பெரிகேயா கேப்னிஸ்
மொக்கு ஈ, அகன்தோபைலஸ் ஹெலியாந்த்
 

 

1. காய்த்துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலைகளையும், நுனிக்குருத்துகளையும் தாக்கி சேதப்படுத்தும்
  • வளர்ச்சியடைந்த புழு காய்களைத் துளைத்து உட்சென்று திசுவை உண்கிறது.
  • சேதம் அதிகமாகும் நிலையில், புழு மொக்கு முழுவதையும் உண்டு சேதப்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்
  • முட்டை - வெள்ளை நிறமாக இருக்கும்.
  • புழு - பச்சைக் கலந்த பழுப்பு நிறத்தல் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்.
  • கூட்டுப்புழு - பழுப்பு நிறமுடையது
  • அந்துப்பூச்சி - பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் V வடிவத் திட்டுகள் காணப்படும்.
Crop Protection Safflower Crop Protection Safflower Crop Protection Safflower

கட்டுப்படுத்தும் முறை

  • கோதுமை அல்லது வார்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலாம்.
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • இயற்கை எதிரிகளான காம்போலிடிஸ் குளோரிடே, எனிகோஸ்பில்லஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • சேதம் அதிகமாகும் நிலையில் மோனோகுரோட்டபாஸ் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 800 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
 

2. குசம்பப்பூ புழு, பெரிகேயா கேப்னிஸ்

Crop Protection - Safflower

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலைகளையும், சில நேரங்களில் காய்களையும் தின்று சேதப்படுத்தும்.
பூச்சியின் அடையாளம்
  • புழு - பச்சைய மற்றும் மென்மையாக இருக்கும்
  • அந்துப்பூச்சி - நடுத்தர பருமனுடையது, பழுப்பு நிறத்திலிருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும். பின் இறக்கை அடர்ந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை

  • கோதுமை அல்லது வாற்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலரம்.
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • காப்பரில் தூளை எக்டர்க்கு 3 கிலோ வீதம் தூவி புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.
 

3. மொக்கு ஈ, அகன்தோபைலஸ் ஹெலியாந்த்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலைகளையும், மொக்குகளையும் உண்டு சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட மொக்குகளில் சிறிய துளைகள் காணப்படும்.
  • சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட மொக்குகள் அழுகிவிடும்.
  • தாக்கப்பட்ட மொக்குகளிலிருந்து துர்நாற்றம் கெரண்ட திரவம் வடியும்.

பூச்சியின் அடையாளம்

  • புழு - வெள்ளை நிறமுடையது, தலை கிடையாது.
  • - சாம்பல் நிறமுடையது, பழுப்பு நிறக் கால்களைக் கொண்டது.

கட்டுப்படுத்தும் முறை

  • டைமீத்தேயேட் 650 மிலி (அ) மாலத்தியான் 200 மிலி மருந்தை எக்டர்க்கு 650 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளித்து மொக்குப்புழுவின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.
 

4. சேம்பப்பூ அசுவினி, யுரோலூகான் கார்த்தாமி

Crop Protection Safflower

பூச்சியின் அடையாளம்

  • குஞ்சுகள் - சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • அசுவினி - கருமை நிறமுடையது, வயிற்று பகுதிக்குக் கீழே இரண்டு குழாய் போன்ற நீட்சிகளைக் கொண்டிருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
  • தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
  • குஞ்சுகள் கழிவுநீர் போன்ற திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்யும்.
  • தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்.
  • இறுதியாக செடிகள் காய்ந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • காலம் கடந்து விதைத்தலைக் தவிர்த்தல் வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • கோதுமை, சோளம் ஆகியவற்றை ஊடுபயிராக 3 வரிகளுக்கு இடை இடையில் நடலாம்.
  • செடிக்கு 1 - 2 கிரைசோபெர்லா புழுவை வெளியிட்டு அசுவினியை அழிக்கலாம்.
  • இயற்கை எதிரிகளான ஏபிலினஸ், மைக்ரோமஸ் ஆகியவற்றை பயன்படுத்தி அசுவினியின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
  • நடவு செய்த 60 நாட்கள் கழித்து டைமீத்தேயேட் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அசுவினியின் தாக்குதலைக் குறைக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024