|
|
பொதுப்பெயர் : துவரை
அறிவியல் பெயர் : கஜானஸ் கஜான்
|
துவரையின் முக்கியமான பூச்சிகள்
I.துளைப்பான்கள் |
1.பச்சை காய்த் துளைப்பான் : ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா |
அறிகுறிகள்
- முதலில் சிறிய புள்ளிகள் இலைகளில் தோன்றும். இப்புள்ளிகள் அளவில் பெரியதாகி பழுப்பு நிறத்தில் வளையங்களைத் தோற்றுவிக்கும். இந்த வளையத்தின் கோடு ஊதா நிறத்தில் இருக்கும்.
- அந்நோய் அதிகமாகும் போது இவ்வகைப் பள்ளிகள் பெரியதாகி ஒன்றோடொன்று சேர்ந்துவிடும்.
- மழைக்குப்பின் பயிரிடப்படும் பயிர்களில் முதிர்ந்த செடிகளின் அறிகுறிகள் முதிர் இலைகளிலும், இளம் செடிகளில் இளம் இலைகளிலும் தோன்றும்.
- ஆரம்ப நிலைகளில் இலைகள் உதிரும்
- காயின் உள்ளே புழுக்கள் தலையை மட்டும் உள்ளே விட்டு, உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும்
- காயைச் சுற்றி வட்டவடிவ துளைகள் இருக்கும்.
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டைகள் : வட்டவடிவில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக காணப்படும்.
- புழுக்கள் : பச்சை நிறத்திலிருந்து பழப்பு நிறம் வரை மாறி மாறித் தோன்றும். பச்சை கலந்த சுடர் பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும். வெள்ளை நிற வரிகளுடன் சுடர் மற்றும் மங்கிய நிற வளையங்களுடன் காணப்படும்.
- கூட்டுப்புழு : பழுப்புநிறத்தில், மண் இலை, காய் பயிர்க் குப்பைகளில் காணப்படும்.
- தாய்ப்பூச்சி : மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து இருக்கும். முன்னிறக்கைகள் சாம்பல் நிறத்திலிருந்து மங்கிய பழுப்பு நிறம் வளர ‘வி’ வடிவ குறியுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் மங்கிய வெள்ளை நிறத்துடன் அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
|
கட்டுப்பாடு
- இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
- எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
- வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12 கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி / லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும்
- டைகுளோர்வாஸ் 625 மி.லி
- குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி
- கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி
- மோனோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625 மிலி
- டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி / எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
- பாசலோன் 35 இ.சி 1.25 லி
(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.) |
|
2. நீல வண்ணத்துப்பூச்சி லேம்பிடிஸ் போயிடிக்ஸ் |
அறிகுறிகள்
- மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்களில் துளைக் குழிகள் காணப்படும்.
- நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.
- தாக்கப்பட்ட இடங்களில் தேன் கரப்புகளுடன், எறும்பு நடமாட்டத்துடன் காணப்படும்.
பூச்சியின் விபரம்
- புழுக்கள் : துட்டையாக, வட்ட வடிவத்தில், மங்கிய பச்சை நிறத்துடன் சொரசொரப்பான தோலுடன் காணப்படம்.
- தாய்ப்பூச்சி : சாம்பல் கலந்த நீல நிறத்தில் தெளிவான காணப்படும் இறக்கைகளின் பின்புறம் எண்ணற்ற வரிகளுடன் பழப்புநிற புள்ளிகள் காணப்படும்.
|
|
|
புழுக்கள் |
தாய்ப்பூச்சி |
|
|
3.புல் நீல வண்ணத்துப்பூச்சி: யூகிரைஸாப்ஸ் நைஜஸ் |
அறிகுறிகள்
- மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.
- காய்களில் புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
பூச்சியின் விபரம்
- புழுக்கள் : மங்கிய பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரியுடன், சிறிய கருப்புநிற ரோமங்கள் உடலின் மீது இருக்கும்
- தாய்ப்பூச்சி : நீல நிறத்தில் , அளவான வடிவில், 5 கருப்பு நிற புள்ளிகள் பின்னிறக்கையிலம், 2 கருப்பு நிறபுள்ளிகள் உள்விளம்பிலும் காணப்படும்
|
|
கட்டுப்பாடு
- இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும்.
- எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
- வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12 கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி / லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.
கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும்
- டைகுளோர்வாஸ் 625 மி.லி
- குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி
- கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி
- மோனோகுரோட்டாபாஸ் 36 எஸ். எல் 625 மிலி
- டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி / எக்டர் இரண்டு முறை தெளிக்கவும்.
- பாசலோன் 35 இ.சி 1.25 லி
(குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.)
- 10 % பொருளாதார சேதநிலையை அடையும்போது கட்டுபடுத்தும் முறைகளை மேற்கொள்ளலாம்.
- ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
|
|
4.இறகுப்பூச்சி : எக்ஸிலாடிஸ் ஆட்டோமோசா |
அறிகுறிகள்
- காய்களில் ஊசி போன்ற துளைகள் தோன்றும்.
- சிறிய முள்ளுடைய புழுக்கள் மற்றும் கூட்டுப்புழு காய்களின் மேல் காணப்படும்.
பூச்சியின் விபரம்
- புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தடன், உரோமம் மற்றும் முன்னால் அன மயிரிழை போன்ற இறக்கையுடன் இருக்கும்.
- தாய்ப்பூச்சி : பழுப்பு நிறத்துடன் , சிறியதாக, இறகு போன்ற இறக்கைகளுடன் காணப்படும்.
|
|
|
5. புள்ளிகாய்த் துளைப்பான்: மெளருக்கா விட்ரேட்டா |
அறிகுறிகள்
- மொட்டுகள், பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்.
- தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும்.
பூச்சியின் விபரம்
- புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும். 2 இணை சுடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்
- தாய்ப்பூச்சி : முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும்
|
|
|
6.முள்ளுக் காய்துளைப்பான்: ஈட்டியல்லா ஜிங்கினெல்லா |
அறிகுறிகள்
- பூக்கள் மற்றும் இளம் காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
- முதிர்ந்த காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிறம் புள்ளியுடன் காணப்படும்.
பூச்சியின் விபரம்
புழுக்கள்
-
ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் ரோஸ் நிறத்திலும் மாறும்
-
முன் மார்புக் கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும்
தாய்ப்பூச்சி
- பழுப்புகலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்
- முன் மார்புகண்டம் - ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்
- முன்னிறைக்கையில் வெள்ளை நிற வரிகள் முன் புற விளிம்பு வரை இருக்கும்
|
|
7. மீன் காய்த் துளைப்பான் : அடிசுரா அட்கின்சோனி |
அறிகுறிகள்
- புழுக்கள்காயின் உள்ளே துளைத்து, உள்ளே உள்ள விதைகளை உண்டு விடும்
கட்டுப்பாடு
பறவை இருக்கைகள் ஒரு எக்டரக்கு 50 என்ற விகிதத்தில் வைக்கவும்
- வளர்ந்த புழு மற்றும் பூச்சிகளை கையால் சேகரித்து அழிக்கவேண்டும்
- காய்த்துளைப்பான்களின் கட்டுப்பாடு.
|
பூச்சியின் விபரம்
- புழு: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் பக்கவாட்டில் குறிகளுடன் காணப்படும்
- புழுவின் கடைசி கண்டத்தில் சிறிது மேடுபோன்று இருக்கும்
- தாய்ப்பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்
- முன்னிறக்கைள் மஞ்சள் நிறத்தில் V வடிவ குறிகளுடன் காணப்படும்
- பின்னிறைக்கைகள் : லேசான பழுப்புள்ள குறிகளுடன் காணப்படும்
|
|
8.துவரை காய் ஈ : மெலோனோகுரோழைமசா அப்டியூசா |
|
அறிகுறிகள்
-
அடர் பழுப்பு படிவுகள் காயின் மேல்புறத்தில் காணப்படும்.
-
காய்ந்த காய்களில் ஊசி போன்ற துளைகள் காணப்படும்.
-
விதைகள் சுருங்கி, கோடுகளுடன், பகுதி உண்ண நிலையில் இருக்கும்.
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சி : சிறியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- தாய்ப்பூச்சி: சிறியதாக, கருப்பு நிறத்தில் காணப்படும்.
கட்டுப்பாடு
- பருவத்துக்கு முன்னரே விதைத்தல்.
|
|
|
9. காய் ஈ : ஒபியோமையா பேசோலி |
அறிகுறிகள்
- இளம் இலைகள் வாடி செடியில் தொங்கிக் கொண்டிருக்கும்
- நாற்றுக்கள் வாடிவிடும்
- இளம் செடிகள் மஞ்சளாகும்
- திண்டுகள் தடித்து, உடையும் நிலையில் இருக்கும்
|
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- தாய்ப்பூச்சி : சிறியதாக, கருப்பு நிறத்தில் காணப்படும்
|
II.சாறு உறிஞ்சும் பூச்சிகள் |
1. காய் நாவாய்ப்பூச்சி: ரிப்டோர்டஸ் பெடஸ்டிரிஸ் |
அறிகுறிகள்
- காய்களில் கருப்புநிறப் புள்ளிகள் காணப்படும்
- இளம் பச்சைக் காய் உதிரும்
- காய்கள் மோசமாக வளர்ந்திருக்கும். காயின் உள்ளே வளர்ச்சி இன்றிய பருப்புகள் காணப்படும்
|
பூச்சியின் விபரம்
- பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், அரை வட்ட வடிவில் இருக்கும்
- இளம் பூச்சிகள் அடர் பழுப்பு நிற எறும்புகள் போன்று தோற்றமளிக்கும்
|
|
2. அவரை நாவாய்ப்பூச்சி: காப்டோசோடா கிரிப்ரேரியா |
அறிகுறிகள்
- செடியின் பகுதிகளில் கூட்டமாக அமர்ந்த, சாற்றை உறிஞ்சும்
|
பூச்சியின் விபரம்
- இளம்பூச்சி மற்றும் தாயப்பூச்சி அரைவட்டவடிவமாக, பச்சைற்ற கேடய நாவாயப்பூச்சி போன்று காணப்படும்
- ஒரு விதி மோசமான வாசனை வெளிவரும்
|
|
3. பீன் அகவினி ஏப்ஸ் கிரேஸிவோரா |
அறிகுறிகள்
- இலைகள், மஞ்சாக்காம்பு, இளம் காய்களைச் சுற்றி சுடர் நிறத்தில் அதிவிணி கூட்டமாக காணப்படும்
- தேன் சுரப்புடன், எறம்புகள் நடமாட்டத்துடன் காணப்படும்
|
பூச்சியின் விபரம்
- இளம் பூச்சி மற்றும் தாய்ப்பூச்சி, அடர் நிறத்தில், வயிற்றுப் பகுதியில் இரண்டு குழாய் போன்ற அமைப்புடன் காணப்படும்
|
|
4. இலை தத்துப்பூச்சி: எம்போஸ்க்கா கெர்ரி |
அறிகுறிகள்
- இலைகள் பல் வண்ண நிறமாக மாறம். மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- பச்சை நிறப்பூச்சிகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும்
|
பூச்சியின் விபரம்
- தாய்ப்பூச்சி: நீளமாக, பச்சை நிறத்தில், கூர்மையாக இருக்கும்.
|
|
5. வெள்ளை ஈ:பெமிசியா டேபேசி |
அறிகுறிகள்
- இலைகள் பல்வண்ண நிறமாக மாறும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
- மஞ்சள் பல்வண்ண நச்சுயிரியின் நோய் பரப்பும் கிருமியாக உள்ளது
பூச்சியன் விபரம்
- தாய்ப்பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகுப் போன்ற பொடியுடன் காணப்படும்
- இளம்பூச்சிகள் மற்றும் கூட்டுப்புழு கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருக்கும். கூட்டுப்புழுவில் விளிம்பில் நிறைய ரோமங்களுடன் காணப்படும்
|
கட்டுப்பாடு
- எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம் அல்லது எண்ணெய் தேய்த்த துணியை செடியின் கீழே வைத்து, செடியை உலுக்கவேண்டும்
- மித்தைல் டெமட்டான் 25 இசி. 500 மி.லி. அல்லது டைமெத்தயோயேட் 30 இ.சி. 500 மி.லி. அல்லது பாஸ்போமிடான் 85 WSC 250 மி.லி. எக்டர் தெளிக்க வேண்டும்
|
|
6. ஈரியொபிட் கரையான் : எசிரியா கஜானி |
அறிகுறிகள்
- துவரை பல்வண்ண தேமல் நச்சுயிரியின் நோய்பரப்பும் காரணியாக உள்ளது
கட்டுப்பாடு
- டைக்கொ பால் 2 மிலி லி அல்லது நனையும் கந்தகம் 2 கி லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்
|
பூச்சியின் விபரம்
- இளம்பூச்சிகள் முதிர்ப்பூச்சிகள் - வெள்ளை நிறமாக இருக்கும்
- மிகச் சிறிய அளவிலான 2 ஜோடி வெர்மிபார்ம் வடிவில் முன்புற கால்கள் அமைந்திருக்கும்
|
III. இலை உண்ணும் பூச்சிகள் |
1.இலை மடிப்பு புழு : ஆன்டிகார்சியா இர்ரோரேட்டா |
அறிகுறிகள்:
- இலைகள் மடிந்து ஒன்று சேர்ந்து காணப்படும்
|
பூச்சியின் விபரம்
- புழு: பச்சை நிறத்தில் காணப்படும்
- முதிர்ப்பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன், இறக்கைகளில் கருப்பு நிற வரியுடன் காணப்படும்
|
|
2. இலை பிணைக்கும் புழு : யூகோசோமா கிரிட்டிக்கா |
அறிகுறிகள்:
- இலைகள் மேலிருந்து சுருண்டு, வெள்ளை நிறமாக மாறி பின் வாடி விடும்
|
பூச்சியின் விபரம்:
- புழு: மஞ்சள் நிறத்தில் காணப்படும்
|
|
3. துவரை இலை சுருட்டுப் புழு : கேலோப்டிலியா சோயல்லா |
அறிகுறிகள் :
- இலைகள் ஒன்றுடன் ஒன்று இளம் குருத்துகளுடன் ஒன்று சேர்ந்து துளைக் குழிகளை ஏற்படுத்தும்
|
பூச்சியின் விபரம் :
- புழு : தடித்து, நீளமாக, மஞ்சள் நிறத்துடன் பழுப்புள்ளத் தலையுடன் காணப்படும்
|
|
4. அவரை இலை துளைக்கும் புழு: சைப்போஸ்டிக்கா கோயிருல்லா |
அறிகுறிகள்
- இலைகளின் மேற்புறத்தில் இலையை துளைத்து உண்ணுவதால் பெரிய ஒழுங்கற்ற காகிதம் போன்ற வரிகள் காணப்படும்
|
பூச்சியின் விபரம்:
- புழு: ஆரஞ்சு நிறத்தில் காணப்படும்
|
பூ உண்ணும் பூச்சிகள் |
1.பூவண்டு : மைலாபிரிஸ் பேலேரேட்டா |
அறிகுறிகள்:
- மொட்டு மற்றும் பூச்சிகளை அதிதீவரமாக உண்ணும்
பூச்சியின் விபரம்
- முட்டைகள் : லேசான மஞ்சள் நிறத்தில், உருண்டை வடிவத்தில் இருக்கும்
- புழு: வெள்ளை நிறத்தில் காணப்படும்
- முதிர்ப்பூச்சி: இறக்கைகள் கருப்பு நிறத்தில் ஆரஞ்சு நிற வட்ட வடிவ புள்ளியுடன், இரண்டு குறுக்கான அலைபோன்ற ஆரஞ்சு நிற வளையம் காணப்படும்.
|
|
2.பூ கருகவைக்கும் புழு : யூபிலம்மா ஹெம்மார்ஹோடா |
அறிகுறிகள்
- பூக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து காணப்படும்
கட்டுப்பாடு:
- 0.03% டைமெத்தாயேட் (அ) டைமெத்தோயேட் 0.03 கலந்து தெளிக்க வேண்டும்
|
பூச்சியின் விபரம்:
- புழு: உரோமங்கள் உடம்பு முழுவதும் காணப்படும்
முதிர்ப்பூச்சி
- முன்னிறக்கைகள் : மஞ்சள் நிறத்தில் ஊதா நிற திட்டுக்களுடன் காணப்படும்
- பின்னிறக்கைகள் : வெள்ளை நிறத்தில் காணப்படும்
|
|