பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
   
குருத்து ஈ : அதெரிகோனா ஓரியன்டாலிஸ் சாம்பல் வண்டு : மில்லோசிரஸ் வகை
தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ் தத்துப்பூச்சி : பைரில்லா பெர்புஸில்லா
இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான் அசுவினி : ரோபாலோசைபம் மெய்டிஸ்
திர் துளைப்பான் ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா குருத்து பூச்சி: பெரிகிரென்ஸ் மெய்டிஸ்
கொத்துப்புழு : கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா கதிர் நாவாய் பூச்சி:  கலோக்கோரிஸ் அங்கஸ்டேடஸ்
   
 
1. குருத்து ஈ : அதெரிகோனா ஓரியன்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டிற்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை தாக்குகிறது. இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்.

பூச்சியின் விபரம்:

  • குருத்து ஈ: வெள்ளை நிறத்தில் இருக்கும்.

 

முதிர் பூச்சி இளம் பூச்சி, புழு, கூட்டுப்புழு மற்றும் முதிர் பூச்சி காய்ந்த நடுக்குருத்து

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்.
  • இமிட்டோகுளோரோபிட் மருந்தினால் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்.
  • அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றியபின் உழுதுவிடவேண்டும்.
  • குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
  • கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை தெளிக்கவேண்டும்
    • மெத்தில் டெமட்டான் 25 இ.சி 500 / எக்டர்
    • டைமீதோயேட் 30 இ.சி 500 மிலி / எக்டர்
    • வேப்பங்கொட்டை வடிநீர் 5 சதவீதம்
    • நீம் அசால் 1 சதவீதம்


மேலே
2.தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ்
தாக்குதலின் அறிகுறிகள்
  • புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்.
  • இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்.
  • வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்.

பூச்சியின் விபரம்

  • புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  தலை பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
  • தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்.

 

கூட்டுப்புழு மற்றும் புழு அந்துப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • அவரை அல்லது தட்டைப்பயிரை 4:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராக பயிர் செய்யலாம்.
  • விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை மணலுடன் (50 கிலோ) கலந்து வீசவும்
    • போரேட் 10 ஜி 8 கிலோ
    • கார்போபியூரான் 3 ஜி 17 கிலோ
    • கார்பரில்+லின்டேன் 4 ஜி 20 கிலோ
    • கார்பரில் 50 டபில்யூ.பி 1 கிலோ

மேலே
    3. இளஞ்சிகப்பு தண்டுதுளைப்பான்

தாக்குதலின் அறிகுறிகள்

    • இளஞ்சிவப்பு புழு தண்டினை துளைத்து உள்ளே சென்று குருத்துக்களை தாக்குகிறது.
    • தாக்கப்பட்ட இளம்பயிரில் குருத்து அழுகிவிடும்.

பூச்சியின் விபரம்

  • பெண் அந்துப்பூச்சி முட்டையை இலையை அடிப் பகுதியில் இடுகிறது.
  • புழு-சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும்இ தலை கருமை நிறமாகவும் இருக்கும்.

முட்டை

கூட்டுப்புழு மற்றும் புழு

முதிர் பூச்சி

மேலே
4. கதிர் துளைப்பான் ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும்.
  • புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும்.

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் : உருண்டை வடிவமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • புழு : பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.  உடலின் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
  • கூட்டுப்புழு : பழுப்பு நிறத்தில் இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்
  • அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  முன் இறக்கை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

புழு

இளம் பூச்சி
முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • இனக்கவர்ச்சி பொறி அமைத்து ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • கதிர் வெளிவந்த 18 நாட்களுக்கு பிறகு கீழ்காணும் மருந்தினுள் ஏதேனும் ஒன்றினைத் தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்
    • கார்பரில் 25 கிலோ
    • மாலத்தியான் 25 கிலோ
    • பாசலோன் 25 கிலோ

மேலே
5. கொத்துப்புழு : கிரிப்டோபிளேபஸ் கினிடியெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு பூக்களில் உள்ள பச்சையத்தினை உண்ணும் பின்னர் கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் சேதப்படுத்தும்.
  • மக்காச்சோள கதிர்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து  காணப்படும்.

பூச்சியின் விபரம்

  • புழு நீளமாகவும், கரும்பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
  • தாய்பூச்சியின் முன்னிறக்கைகள் கரும்சாம்பல் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • மோனேகுரோடோபாஸ் (அ) எண்டோசல்பானை தெளிக்கலாம்

 


மேலே
6. சாம்பல் வண்டு : மில்லோசிரஸ் வகை

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழுக்கள் வேர்களின் நுனிகளை உண்ணும், வண்டுகள் இலைகளின் ஓரங்களைக் கடித்து சேதம் உண்டாக்கும்.

பூச்சியின் விபரம்

  • வண்டு : சாம்பல் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • குயினால்பாஸ் 25 இ.சி 1 லி , எக்டர் (அ) கார்பரில் 50 டபில்யூ பி 1 கிலோ

மேலே
7. தத்துப்பூச்சி : பைரில்லா பெர்புஸில்லா

தாக்குதலின் அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும்
  • இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்
  • மேற்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்தும், பக்கவாட்டில் மொட்டுகள் முளைக்கத் துவங்கும்

பூச்சியின் விபரம்

குஞ்சுகள் : ஆரஞ்சு நிறத்திலும், குஞ்சுகளின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பு காணப்படும்.

தத்துப்பூச்சி:  வளர்ந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும் கூரிய மூக்குடனும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தேவைக்கு அதிகமான பசுந்தாழ் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
  • விளக்குப் பொறி அமைத்து தத்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரிப்பதன் மூலம் குஞ்சுகளையும் முட்டைகுவியலையும் அழிக்கலாம்
  • முட்டைப்புழு ஒட்டுண்ணியான எப்ரிகிரேனியா மெலனோலூகா எக்டருக்கு 8-10 இலட்சம் வீதம் வெளியிட்டு தத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்
  • கீழ்காணும் ஏதேனும் ஒரு மருந்தினை 150 வது மற்றும் 210 வது நாளில் தெளிக்கலாம்
    • மாலத்தியான் 50 இ.சி 2000 மிலி
    • மோனோகுரோடோபாஸ் 36 டபில்யூ.எஸ்.சி 2000 மிலி
முதிர் பூச்சி

மேலே
8. அசுவினி : ரோபாலோசைபம் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
  • இலை குருத்துகளின் வட்டப் பகுதியை சுற்றிலும் கூட்டமாக காணப்படும்

 

பூச்சியின் விபரம்

அசுவினி - கரும் பச்சை நிற கால்களுடன் மஞ்சள் நிறமாக தோன்றும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 இ.சி 20 மிலி பூச்சி மருந்தினை தெளிக்கலாம்

 

அசுவினி முதிர் பூச்சி இளம் பூச்சி

மேலே
9.குருத்து பூச்சி: பெரிகிரென்ஸ் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
  • தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மேலிருந்து கீழாக உதிரும்
  • கதிர் பிடித்தல் இருக்காது மற்றும் தாக்குதல் தீவிரமாக இருந்தால் பயிர்கள் காய்ந்துவிடும்
  • இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்

முட்டை : இலையின் திசுகளின் உள்ளே முட்டைகள் இட்டு வெள்ளை நிற மெழுகால் மூடப்பட்டிருக்கும்
தாய்ப்பூச்சி : இறக்கைகள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், கரும் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

இளம் பூச்சி முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்:

கீழ்வரும் பூச்சி மருந்தினுள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்

  • டையசின் 0.04 சதவிகிதம்
  • டைமிதோயேட் 0.02 சதவிகிதம்
  • பாஸ்பாமிடான் 250 மி.லி

மேலே
10.கதிர் நாவாய் பூச்சி:  கலோக்கோரிஸ் அங்கஸ்டேடஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் சாறை உறிஞ்சுகிறது
  • பாதிக்கப்பட்ட கதிர் பால் பிடிக்காமல் சுருங்கி பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • குஞ்சுகள் ஆரஞ்சு மற்றும் வெளிரிய பச்சை நிறமாகவும், தாய்பூச்சியுடன் கதிர்களில் காணப்படும்

பூச்சியின் விபரம்

  • முட்டை : உருண்டையாக நீல நிறத்தில் இருக்கும்
  • குஞ்சுள் : ஒடுங்கியும், பச்சை நிறமாகவும் காணப்படும்
  • தாய்ப்பூச்சி : ஆண் தாயப்பூச்சி பச்சை நிறமாகவும், பெண்தாய்ப்பூச்சி பச்சை நிறமாகவும், ஓரத்தில் பழுப்பு நிறமாகவும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறைகள்:

கீழ்காணும் ஏதாவது ஒரு மருந்தினை கதிர் வரும் தருவாயில் மூன்றாவது மற்றும் பதினெட்டாவது நாளில் தெளிக்கவும்

  • கார்பரில் 10 டி 25 கிலோ /எக்டர்
  • மாலத்தியான் 5 டி 25 கிலோ /எக்டர்
  • பாசலோன் 4 டி 25 கிலோ /எக்டர்
  • வேப்பம் கொட்டை வடிநீர் 5 சதவீதம்
  • அசடிராக்டின் 1 சதவீதம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014