பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
Cotton

பொதுப்பெயர்   :   பருத்தி

அறிவியல் பெயர் :  காஸிப்பியம் வகை

குடும்பம் :  மால்வேஸியே



காய் உண்ணும் பூச்சிகள்
அமெரிக்கன் காய் புழு, ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இளஞ்சிகப்பு காய்ப் புழு, பெக்டினோபோரா கொச்பியெல்லா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
காய் புழுக்கள்
எரியாஸ் வைட்டெல்லா, எரியாஸ் இன்சுலேனா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
பருத்திக் கூன்வண்ட பூச்சி, பெம்பெருலஸ் அபினிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தண்டு கூண்வண்டு, அலிசிடோடஸ் அபாஸர் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
தண்டுத் துளைப்பான், ஸ்பெனோட்ரா காஸ்ஸிபி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலை சுருட்டு புழு, ஸைலெப்ட்டா டெரோகேட்டா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலையைத் தாக்கும் பூச்சிகள்
புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சாம்பல் நிற வண்டு, மில்லோசெரஸ் யன்டிசிம்பஸ்டுலேட்டஸ் மாக்குலோசஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சாறு உறிஞ்சும் பூச்சிகள்
தத்துப்பூச்சி, அம்ராஸ்கா பிகூட்டுலா பிகூட்டுலா அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
பருத்தி அசுவினி, ஏபிஸ் கொசப்பி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
இலைப்பேன், திரிப்ஸ் டபேசி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
வெள்ளை ஈ, பெமிசியா டேபேசி அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சிவப்பு பருத்தி நாவாய்ப்பூச்சி, டைஸ்டெர்கஸ் சிங்ககுலேட்டஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
சாம்பல் நிற நாவாய்ப்பூச்சி, ஆக்ஸிகார்னியஸ் ஹையாலிபென்னிஸ் அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு
மாவுப்பூச்சி பீனோகாக்கஸ் வகை, பெரிசா விதை, மாக்னோ நெல்லிகாக்கஸ் வகை அறிகுறிகள் அடையாளம் கட்டுப்பாடு

 

காய் உண்ணும் பூச்சிகள்
1. அமெரிக்கன் காய் புழு, ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு பருத்தி காயினை வளைத்து உள்ளே சென்று உட்பகுதியை சாப்பிடும்.
  • இப்புழு, காயினைத் துளைத்து தலைப்பகுதியை மட்டும் உள்ளே செலுத்தி, உடலின் பாதி பகுதியை வெளியே வைத்துக் கொண்டு உண்ணும்.

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் - அந்துப்பூச்சி மஞ்சள் நிற முட்டைகளை இலைகளின் மேற்பரப்பில் தனித்தனியே இடும்.
  • புழு பச்சை நிறத்திலும் அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் V- வடிவ கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • தொடர்ச்சியாக பருத்தி பயிரிடுவதைத் தவிர்த்து மாற்று பயிர்களை பயிரிடலாம்.
  • தாக்கப்பட்ட பயிர் சேதங்களை சேகரித்து அகற்ற வேண்டும்.
  • தேவைக்கு அதிகமாக பசுந்தாழ் உரங்கள் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
  • தேவையான அளவு நீர் நிர்வாகம் செய்ய வேண்டும்.
  • விதைப்பு செய்த 7வது மற்றும் 12வது வாரங்கள் கழித்து நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (3X102 POB) பயன்படுத்தி காய் புழுவினை அழிக்கலாம்.
  • விதைப்பு செய்த 45 நாட்கள் கழித்து முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோக்ரைமா ஐ பயன்படுத்தி அந்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
  • இயற்கை எதிரியான கிரைசோபெர்லா கார்னியா ஐ எக்டர்க்கு 1 லட்சம் என்ற எண்ணிக்கையில் வெளியிட்டு காய்ப்புழுவை அழிக்கலாம்.
  • இயற்கை எதிரிகளுக்கு பாதிப்பு விளைவிக்காத பூச்சி மருந்தான பாசலோன் தெளிக்க  வேண்டும்.
  • ULV மற்றும் அகேலா முறையில் மருந்துகளைத் தெளிக்க கூடாது.
  • மருந்துகளை சரியான அளவிலும், சரியான அளவு தெளி திரவத்துடனும் கலந்து தெளிக்க வேண்டும்.
  • காய்கள் உருவாகும் தருவாயில் கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை எக்டர்க்கு 1000 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
    • பாசலோன் 35 EC 2.5 லிட்டர்
    • குயினால்பாஸ் 25 EC 2.0 லிட்டர்
    • கார்பரில் 50 wp 2.5 கிலோ/எக்டர்
Cotton Crop Protection Cotton
Crop Protection Cotton முட்டைகள்     
Crop Protection Cotton புழு   
Crop Protection Cotton கூட்டுப்புழு
Crop Protection Cotton  அந்துப்பூச்சி

 

காய் உண்ணும் பூச்சிகள்
2. இளஞ்சிகப்பு காய்ப் புழு, பெக்டினோபோரா கொச்பியெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்

  •  முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் கப்பைகளையும், மொக்குகளையும் , பூக்களையும் மற்றும் இளம் காய்களையும் தாக்கி அழிக்கும்.
  •  தாக்கப்பட்ட மொட்டுகள் உதிர்ந்து விடும்.
  •  தாக்கப்பட்ட மலர்கள் நெருக்கமாய் குவிந்து காணப்படும்.
  •  வளர்ச்சியடைந்த புழு காயினைத் துளைத்து உள்ளே சென்று உண்டு சேதம் விளைவிக்கும்,விதைகளையும் தாக்கும்.
  •  இதனால் தாக்கப்பட்ட பஞ்சுகள் கரைபடிந்து காணப்படும்.

 கட்டுப்பாடு

  • பயிர் சேதங்களை அகற்றி வயல்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
  • நிலத்தை ஆழமாக உழுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • சரியான பருவத்தில் விதைப்பு செய்வதன்மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்.
  • இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது எக்டர்க்கு ட்ரைசோபாஸ் 2.5 லிட்டர் மருந்தைத் தெளித்து இளஞ்சிகப்பு புழுவின் தாக்குதலைக் குறைக்கலாம்.
Crop Protection Cotton Crop Protection Cotton

பூச்சியின் விபரம்

  •  புழு இளஞ்சிகப்பு நிறத்திலும், பழுப்பு நிற தலையையும் கொண்டிருக்கும்.
  •  அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். இரண்டு இறக்கையிலும் வரிவரியாய் கோடுகளும்,  புள்ளிகளும் காணப்படும்.
காய் புழுக்கள்
3. எரியாஸ் வைட்டெல்லா எரியாஸ் இன்சுலேனா

பூச்சியின் விபரம்
ஏரியாஸ் வைட்டெல்லா

  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இரண்டு இறக்கையில் வெள்ளை நிறக்கோடு காணப்படும். மேலும் இறக்கைகள் பச்சை நிறத்தில் இருக்கும்.

ஏரியாஸ் இன்சுலேனா

  • புழு - பழுப்பு  நிறத்தில் இருக்கும், உடலின் மேற்பரப்பில் கரும் புள்ளிகள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில், முன் இறக்கையில் வெள்ளை நிறக்கோடு இல்லாமல் இருக்கும்.

கட்டுப்பாடு

  • பூச்சி தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அகற்ற வேண்டும்.
  • பூச்சி உண்ணக்கூடிய மாற்று பயிர் வகைகளை நீக்க வேண்டும்.
  • நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் சேதம் அதிகமாகும்போது குயினால்பாஸ் 2 லிட்டர் அல்லது பாசலோன் 2.5 லிட்டர் மருந்தைத் தெளிக்கவும்.
    CroP Protection Cotton Crop Protection Cotton Crop Protection Cotton
    குருத்துப்பகுதி வாடித் தொங்குதல்  துளைக்குழிகள் மற்றும் அழுகுதல் மலராத மொட்டுக்கள்

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழுக்கள் இளம் பருத்தி பயிரைத் தாக்குவதால் குருத்துப்பகுதி வாடித் தொங்கும்.
  • காய்ந்து விழுந்துவிடும்.
  • மலரும் தருணத்தில் மொட்டுகளையும், பூக்களையும் தாக்கி சேதம் விளைவிக்கும்.
  • தாக்கப்பட்ட மொட்டுக்கள் மலராமலேயே விழுந்துவிடும்.
Crop Protection Cotton Crop Protection Cotton
ஏரியாஸ் வைட்டெல்லா 
புழு   அந்துப்பூச்சி 
Crop Protection Cotton Crop Protection Cotton
ஏரியாஸ் இன்சுலேனா
புழு  அந்துப்பூச்சி

காய் புழுக்கள்
4. பருத்திக் கூன்வண்டு பூச்சி, பெம்பெருலஸ் அபினிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • நில மட்டத்திற்கு சற்று மேலே தாக்கப்பட்டத் தண்டுகளில் முடிச்சுகள் காணப்படும்.
  • இளம் பயிர் இப்பூச்சியினால் தாக்கப்பட்டால் மடிந்து விடும்.
Crop Protection Cotton Crop Protection Cotton Crop Protection Cotton

பூச்சியின் விபரம்

  • புழு - வெள்ளை நிறமாக, கால்கள் இல்லாமல் காணப்படும்.
  • வண்டு - சிறியதாக, கருமை நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.

கட்டுப்பாடு

  • எக்டர்க்கு 30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
  • நடவு செய்த 20 நாட்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.
  • அடி உரமாக தொழு எருவை எக்டர்க்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ வேண்டும்.
 
5. தண்டு கூண்வண்டு, அலிசிடோடஸ் அபாஸர்

தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்டத் தண்டின் நுனிக்குருத்தில் முடிச்சுகள் காணப்படும்.
  • தாக்கப்பட்டத் தண்டுகளில் சிறியத் தாவரங்கள் காணப்படும்.

பூச்சியின் விவரம்

  • கூன்வண்டு - கருமைக் கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும், மேலும் உடலின் மேற்பரப்பில் குறுக்காக கோடு காணப்படும்.
 
6. தண்டுத் துளைப்பான், ஸ்பெனோட்ரா காஸ்ஸிபி

தாக்குதலின் அறிகுறிகள்

  • தாக்கப்பட்ட தண்டுகளில் சிறியத் துளைகள் காணப்படும்
  • இலைகள் உதரிந்துவிடும்.
  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து மடிந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • வண்டு பழுப்பு நிறத்தில் இருக்கும்.
Crop Protection Cotton Crop Protection Cotton
தாக்கப்பட்ட தண்டு தாக்கப்பட்ட செடிகள்

 
7. இலை சுருட்டு புழு: ஸைலெப்ட்டா டெரோகேட்டா

அறிகுறிகள்

  •  குழாய் போன்று இலைகள் சுருண்டு, முழுவதும் பட்டு போன்ற நூல்களால் சுற்றியிருக்கும்
  •  இலையின் விளிம்புகளை உண்டு விடும்
  • தீவிர தாக்குதலின் போது, இலைகள் உதிர்ந்துவிடும்

கட்டுப்பாடு

  • தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
  • புழுக்களை கையால் சேகரித்து, அழிக்க வேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும்
    • குளோர் பைரிபாஸ் 20 EL 2 லி /ஹெக்
    • டைகுளோர்வாஸ் 76 WSC  1லி /ஹெக்
    • பெனிடிரோதியான 50 EL  @625 மிலி

பூச்சியின் விபரம்

  • புழு அடர்பச்சை நிறத்தில், அடர்ந்த தலையுடன் காணப்படும்
  • முதிர்ப்பூச்சி மஞ்சள் நிற இறக்கைகளுடன் பழுப்புற்ற இலை போன்ற குறிகளுடன் காணப்படும்
Crop Protection Cotton Crop Protection Cotton Crop Protection Cotton
சுருண்ட இலைகள் புழு முதிர்ப்பூச்சி
II. இலையைத் தாக்கும் பூச்சிகள்
8. புகையிலை புழு, ஸ்போடாப்டிரா லிட்டுரா

பூச்சியின் விபரம்

  • முட்டைகள் - குவியலாய், பழுப்பு நிறத்தல் இருக்கும்.
  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும். கரும்புள்ளிகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்.
  • அந்துப்பூச்சி - அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறமாகவும், வெள்ளை நிறக்கோடுகளைக் கொண்டிருக்கும்.
  •  பின் இறக்கை வெள்ளை நிறமாகவும், பழுப்புநிறத் திட்டுகளையும் கொண்டிருக்கும்.
Crop protection Cotton Crop ProtectionCotton

 

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு இலையை உண்டு சேதப்படுத்தும்.
  • சேதம் அதிகமாகும் போது தாக்கப்பட்ட பயிர்களில் இலை மற்றும் காய்கள் உருவாகாது.

கட்டுப்பாடு

  • விளக்கு பெரறி அமைத்து அந்துப்பூச்சியினைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறியை எக்டர்க்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • வயல் வரப்புகளில் ஆமணக்கை பயிரிடலாம்.
  • முட்டைக்குவியலை பருத்தி மற்றும் ஆமணக்கு பயிரிலிருந்து சேகரித்து அழிக்கலாம்.
  • பயிர் சேதங்களுடன் வளர்ச்சியடைந்த புழுக்களைச் சேகரித்து அழிக்கலாம்.
  • இப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும் பொழுது கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினைக் தெளித்து அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
    • குளோர்பைரியாஸ் 20 EC 2.0 லி/எக்டர்
    • டைகுளோரோவாஸ் 76 WSC 1லிட்டர்/எக்டர்
    • பெனிட்ரோதையான் 50 EC 625மிலி/எக்டர்
 
9. சாம்பல் நிற வண்டு: மில்லோசெரஸ் யன்டிசிம்பஸ்டுலேட்டஸ்

மாக்குலோசஸ்
மி.ஸப்பேசியாட்டஸ்
மி.விரிடானஸ்
மி.டிஸ்கலர்

அறிகுறிகள்

  • இலை விளிம்புகளை வெட்டி உண்ணும்
  • செடிகள் தொகுப்பாக மடியும்
  • செடிகளை பிடுங்கும்போது எளிதாக வரும்
  • புழுக்கள் வேர்களை உண்டு வரும்

பூச்சியின் விபரம்

  • புழு - சிறியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • மில்லோசெரஸ் யன்டிசம்பஸ்டுலேட்டஸ் பச்சை நிற இறக்கைகளுடன் அடர்ந்த வரிகளுடன் காணப்படும்
  • மி.சப்பேசியேட்டாஸ் - பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • மி.விரிடியேனஸ் - சிறியதாக, லேசான பச்சை நிறத்தில் காணப்படும்
  • மி. டிஸ்கலர் - பழுப்புநிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு

  • தாக்கப்பட்ட கிளைகள் செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • குயினைல்பாஸ் 0.05 (அ) குளோர்பைரிபாஸ் 0.05 தெளிக்க வேண்டும்

 

 
11. பருத்தி அசுவினி, ஏபிஸ் கொசப்பி

தாக்குதலின் அறிகுறிகள்

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சி உண்ணும்.
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சுருண்டு விடும்.
  • தாக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்.
  • குஞ்சுகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை சுரக்க செய்வதால், இலைகள் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமைநிறமாக மாறிவிடும்.
Crop Protection Cotton Crop Protection Cotton Crop Protection Cotton

பூச்சியின் விபரம்

  • குஞ்சுகள் - மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
  • அசுவினி - பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு

  • இமிடோகுளோர்பிட் 200 SL 100 மி.லி
  • மெதில் டெமட்டான் 500 மி.லி
  • டைமீதேயேட் 500 மி.லி
  • பாஸ்போமிடான் 600 மி.லி
  • மோனோகுரோட்டபாஸ் 1000 மி.லி
 
12. இலைப்பேன் : திரிப்ஸ் டபேசி

பூச்சியின் விபரம்

  • இளம் பூச்சி : மிகச் சிறியதாக, தட்டையாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும
  • முதிர்பூச்சி : சிறியதாக, தட்டையாக, மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு

  • இமிடாகுளோபிரிட் 70ws@ 7 கி/ கிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.
    • இமடாகுளோரிட் 200 SL  @100 மி.லி./ஹெக்
    • மித்தைல் டெமட்டான் 25 EL மிலி/ஹெக்
    • டைமெத்தாயேட் 30EL  500 மிலி/ஹெக்
    • பாஸ்போமிடான் 40SL 600 மி.லி /ஹெக்
    • மோனோகுரோட்டாமாஸ் 36 SL 1000 மிலி /ஹெக்
    • வேப்பக் கொட்டைச் சாற 5% 2 கிலோ/ ஹெக்
அறிகுறிகள்
  • இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் கருக்கங்களுடன் காணப்படும்
  • நுனி மொட்டுகளை தாக்குவதால் ஒழுங்கற்ற நுனிகளுடன் காணப்படும்
  • இலையின் அடிப்புறத்தில் வெள்ளை நிறமாக காணப்படும்

 

 
13. வெள்ளை ஈ: பெமிசியா டேபேசி

அறிகுறிகள்

  • இலைகளில் பச்சையம் இழந்த புள்ளிகள் தோன்றி, பின் இந்த புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையில் உள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும்
  • தீவிர தாக்குதலால், முதிர்ச்சி அடைவதற்கு முன் இலைகள் உதிர்ந்துவிடும்
  • மொட்டுகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடும். காய்கள் ஒழுங்கற்ற முறையில் திறக்கும்
  • இலை சுருள் நச்சுயிரி நோயை பரப்பும் காரணியாக உள்ளது.

பூச்சியின் விபரம்

  • இளம்பூச்சி பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில், முட்டை வடிவத்தில் இருக்கும்.
  • கூட்டுப்புழு முட்டை வடிவத்தில், இலையின் அடிப்புறத்தில் காணப்படும்.
  • முதிர்ப்பூச்சி மிகச் சிறியதாக. மஞ்சள் நிற உடலுடன், வெள்ளை நிற மெழுகு போல் இருக்கும்.

 

Crop Protection Cotton Crop Protection Cotton Crop Protection Cotton
     இளம் பூச்சி கூட்டுப்புழு முதிர்ப்பூச்சி

 

கட்டுப்பாடு

  • குளிர் அல்லது கோடை பருவத்தில் பருத்தியை வருடத்தில் ஒரு முறை பயிரிட வேண்டும்
  • பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும். சோளம், ராகி, மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் பயிரிடக் கூடாது
  • மாற்று கிளை ஒம்புயிரிகளான அடிடில்லான இண்டிகம், குரேலாசோபோர் பருவத்தில் விதைத்து, பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளியை மேற்கொள்ள வேண்டும்
  • அதிக இடைவெளி விட்டு பயிரிடவேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட உரங்களின் அளவை அளிக்க வேண்டும்
  • தாமதமாக விதைக்கக் கூடாது
  • வயல் சுகாதராமாக இருக்க வேண்டும்
  • மாற்று ஓம்புயிரி பயிர்களான கத்திரி, வெண்டை, சூரியகாந்தி பயிரிடக் கூடாது
  • மஞ்சள் நிற ஒட்டு பொறி @12/ ஹெக் என்ற அளவில் வைக்கலாம்
  • தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
  • பின்வருவனவற்றும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை தெளிக்கலம்
  • வேப்பங்கொட்டைச் சாறு 5% (50 கிலோ) , வேப்எண்ணெய் 5 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்
  • மீன் எண்ணெய் சோப்@ 25% மி.கி லிட்டர்
  • நொச்சி இலைசாறு 5 (50 கிராம் லிட்டர்)
  • கத்தாரன்தஸ் ரோஸியே சாறு 5%
  • தாக்குதலின் ஆரம்பத்தில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம் (500 மி.லி/ ஹெக்)
  • மித்தைல் எடமட்டான் 25 EL 500 மி.லி. (அ) பாஸ்போமிடான் 40 SL 600 மிலி/ ஹெக்.
  • பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை தாக்குதல் தீவிரமாக இருக்கும் போது தெளிக்கலாம் 11000 மி.லி./ ஹெக்
    • பாஸயோன் 35 EL 2.5 லி /ஹெக்
    • குயினைப்பாஸ் 25EL 2 லி/ ஹெக்
    • மோனோகுரோட்பிபாஸ் 36SL 1.25 லி/ ஹெக்
    • டிரை அசோபாஸ் 40EL 2 லி/ ஹெக்
    • அஸிபேட் 75SP 1.30 கிலோ /ஹெக்

குறிப்பு : செயற்கை பைரித்திராய்டுகள் பயன்படுத்துவதால் பருத்தியில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகமாகும். சைப்பர் மெத்திரின், பென்வலேரேட், டெல்டாமெத்திரின் வெள்ளைஈ, வளர்வதற்கு காரணமாகின்றன.

 
14. சிவப்பு பருத்தி நாவாய்ப்பூச்சி, டைஸ்டெர்கஸ் சிங்ககுலேட்டஸ்

அறிகுறிகள்

  • பருத்தி நூல்கள் சிவப்பு நிறமாக, காய்கள் அமுகி காணப்படும்
  • காயின் உள்ளே காய்ந்த வளர்ச்சியுடன் அல்லது நீரில் ஊறிய புள்ளிகள் காணப்படும்
  • இளம் காய்கள் சரியாக உருவாகமாகல், அடர் பழுப்பு நிறமாக மாறும்
  • நெமட்டோஸ்போரா காஸிப்பி பாக்டீரியம் தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் உள்ளே நுழைந்து சேதம் ஏற்படுத்தும்

பூச்சியின் விபரம்

  • இளம் மற்றும் முதிர்ப்பூச்சி சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிற வளையம் வயிற்று பகுதியிலும், இறக்கைகளில் கருப்புநிற குறிகளுடனும் காணப்படும்.

கட்டுப்பாடு

  • வயலை உழுது முட்டையை வெளிக் கொண்டு வரவேண்டும்.
  • பாஸ்போமிடான் 100 இ.சி. 250 மி.லி /ஹெக்.
Crop Protection Cotton
 
15. சாம்பல் நிற நாவாய்ப்பூச்சி, ஆக்ஸிகார்னியஸ் ஹையாலிபென்னிஸ்

பூச்சியின் விபரம்

  • முட்டை சிகர் வடிவத்தில், வெள்ளை நிறக் கூட்டமாக 2-10 என்ற அளவில் பகுதி திறந்த காய்களின் உள்ளேயும், காயின்
  • இளம் மற்றும் முதிர்ப்பூச்சி சாம்பல் நிற, பழுப்புநிற பூச்சிகள், கூர்மையான தலையுடன், கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும்

கட்டுப்பாடு

  • பாஸ்போமிடான் 100 250 மிலி ஹெக் தெளிக்க வேண்டும்

 

அறிகுறிகள்

  • திறந்த காய்களில் உள்ள விதைகளின் சாற்றை உறிஞ்சி பஞ்சு முழுவதும் கருப்பு நிறமாக மாறும்
  • விதைகள் நிறம் மாறி, கருங்கிக் காணப்படும்
 
16. மாவுப்பூச்சி பீனோகாக்கஸ் வகை, பெரிசா விதை, மாக்னோ நெல்லிகாக்கஸ் வகை

அறிகுறிகள்

  • அதிக கூட்டமாக இலையின் அடிப்புறத்தில், மெழுகு போன்று காணப்படும்
  • இதனால் பூஞ்சாண் வளர்ச்சியும் காணப்படும்
  • தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறும்

கட்டுப்பாடு

பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்

  • கார்பரில் 50wp @ 1கிலோ/ ஏக்கர்
  • தையோடிகார்ப் 75wp @  250 கிராம் /ஏக்கர்
  • ப்ரோபெனோபாஸ் 50EC  500 மி.லி /ஏக்கர்
  • அஸிப்பேட் 75SP@ 800 கிராம்/ ஏக்கர்
Crop Protection Cotton Crop Protection Cotton
தாக்கப்பட்ட செடிகள் மாவுப்பூச்சிகள் தண்டுப்பகுதியில்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024