பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
வெட்டுக்கிளிகள்: ஹய்ரோக்ளைபஸ் பேன்யன் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- முதிர்ந்த மற்றும் குட்டி வெட்டுக்கிளிகள் இலைத்தாள் விளிம்புகளிலிருந்து உண்ண ஆரம்பிப்பதால் இலைகள் வெட்டுப்பட்டது போல் காட்சி அளிக்கும்.
- இலைத்தாள் முழுதும் தின்ற பின் நடுநரம்பு மட்டும் தனியாகத் தெரியும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டைகள் பை வடிவில், பத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலை மட்குகளில் அல்லது மண்ணில் காணப்படும். ஒவ்வொரு முட்டைப் பையிலும் 10-300 முட்டைகள் வரை அரிசி வடிவில் காணப்படும்.
- குட்டி வெட்டுக்கிளிகள்: முதிர்ந்த வெட்டுக்கிளிகளைப் போலவே, அளவில் சிறியதாகவும் வெளிர் நிறத்தில் இறக்கைகள் இன்றிக் காணப்படும்.இப்பருவம் 5-10 நாட்கள் வரை இருக்கும்.
- முதிர்ந்த வெட்டுக்கிளிகள்: குஞ்சுகள் ஒரு மாதங்களில் முதிர்ச்சி அடைகின்றன. இவை 1-2 மாதங்கள் வரை வாழ்கின்றன.
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் முறைகள்:
- நன்கு உழவு செய்வதல் மற்ற செடிகள் பொதைந்து போவதால் வெட்டுக்கிளிகள் தங்கி வாழ்வதற்கும் சாப்பிடுவதற்கும் பயிர் இல்லாமல் அவை மடிந்து விடும்.
உயிரியல் முறை:
- நாசிமா லொகஸ்டா எனும் புரோட்டோசோவா அடங்கிய பொறிகளை வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் வைக்கலாம்.
- நாசிமா லொகஸ்டா ‘நோலோபெய்ட்’, ‘செமாஸ்போர்’ எனும் பெயர்களில் கடைகளில் கிடைக்கின்றது. இவை வெட்டுக்கிளிகளை தாக்குகின்றது. இவை வெட்டுக்கிளிகளை முற்றிலும் அழிக்காது. பூச்சியில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
|
|
|
இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும் |
நடுநரம்பு மட்டும் தனியாக காட்சி அளிக்கும் |
|
|
வெட்டுக்கிளிகள |
|
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115. |
|