பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
|
பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் சாற்றை உறிஞ்சி தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளை நிற துாள்கள் படிந்திருக்கும். இவை சோகையின் நிறத்தினை ஓரங்களில் மஞ்சளாக மாறி காய்ந்து போகும்.
- பின்பு இலைகள் உடைந்து முழுவதுமாக காய்ந்துவிடும்
- பூச்சிகள் இலைப் பரப்பில் தேன் போன்ற திரவத்தினை சுரக்கச் செய்வதால் கரும்பூசணப் படலம் காணப்படும். எனவே இலைகள் எரும்பினால் கவரப்பட்டு கருமையாக மாறிவிடுகின்றது.
- வெள்ளை நிறத் துகள்கள் நிலம்/மண் மீதும் கொட்டிக் காணப்படும்.
|
|
|
|
|
|
|
இலைகளில் வெள்ளை நிற துாள்கள் |
தேன் போன்ற திரவங்கள் |
நிலம்/மண் மீது வெள்ளை நிறத் துகள்கள் |
பாதிக்கப்பட்ட வயல் |
|
பூச்சியின் விபரம்:
|
|
|
|
|
|
இளம் குஞ்சு |
|
அசுவினி |
|
கட்டுப்படுத்தும் முறை:
உழவியல் மற்றும் இயற்பியல் முறைகள்:
- இரட்டைப் பார் நடவு முறையைப் பின்பற்றுதல்.
- அதிகப்படியான நைட்ரஜன் அல்லது அம்மோனியம் உரமிடுதலைத் தவிர்க்கவும்.
- தொளு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம் ஆகிய அங்கக உரங்களை முடிந்த அளவு பயன்படுத்துதல்.
- வரிசையாக கரும்புகளை விட்டம் கட்டவேண்டும்.
- பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்குப் பொருளாக பயன்படுத்தக் கூடாது.
உயிரியல் முறை:
- டையப்போஅபிடிவோரா குடும்பத்தினைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை வயலில் வளரச் செய்யலாம்.
- பிவேரியா பாஸியானா, கிளாடாஸ்போரியம், ஆக்ஸிஸ்போரம், மெட்டாரைஸோபியம் அனிசோபிலே, வெர்டிசிலியம் லெகானி போன்ற உயிரிகளையும் ஒட்டுண்ணியாகப் பயன்படுத்தலாம்.
- வயலில் என்கார்சியா பிளேவோஷ் கூட்டலம் விடவேண்டும்.
இரசயான முறை:
- குளோர் பைரிபாஸ் 20 EC கரைசலினை 2 மி.லி/லி என்ற அளவில் எடுத்து விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடலாம்.
- போரேட் 10 ஜி (நி) 5 கி.கி/ஏக்கர் அல்லது அசிப்பேட் 75 எஸ்.பி 1 கி/லி குளோர்பைரிபாஸ் 20 EC 2 மி.லி/லி,
- மாலத்தியான் 50 EC 2 மி.லி/லி, டைமெத்தோயேட் 30 EC 1.7 மி.லி/லி ஆக்ஸிமெட்டான்மீதைல் 25 EC 1.3 மி.லி/லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினைத் தெளிக்கலாம்.
- மாலத்தியான் 5% பொடியினை ஏக்கருக்கு 10 கி.கி என்ற வீதம் வயலில் இடலாம்.
|
Content Validators:
Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.
Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115 |
|