சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
அரிசி வண்டு (Rice weevil) ஸைடோஃபைலஸ் ஒரைஸே
இவ்வண்டு கோதுமை, அரிசி, மக்காச்சோளம், சோளம், நெல் முதலிய தானியங்களைச் சேதப்படுத்துகின்றன. தாய்வண்டு 3 மி.மீ நீளமுள்ளது. கறுப்பு  அல்லது கருஞ்சிவப்பு நிறமானது. இதன் முன் இறக்கைகள் மீது நான்கு கோடுகளம் காணப்படும். இதன் வாய்ப்பாகம், மூக்கு அல்லது அலகு போன்று நீண்டு வளைந்து காணப்படும். இம்மூக்கின் நுனியில் வாய்ப்பாகங்கள் அமைந்துள்ளன.

தாய் வண்டானது தானியத்தின் மேல்பாகத்தைச் சுரண்டி முட்டையிட்டு அதை ஒருவித திரவத்தினால் மூடிவிடும். நான்கு முதல் ஐந்து மாதங்களில் ஒரு வண்டு 300 முதல் 400 முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து கால்களற்ற புழுக்கள் வெளிவரும் வண்டுகளைக்காட்டிலும் புழுக்களே அதிகமான சேதத்தை உண்டாக்குகின்றன. புழுக்கள் தானியத்தின் உள்ளே இருந்து கொண்டு உண்டு வாழ்ந்து சுமமர் 25 நாட்களில் கூட்டுப்புழுக்களாக மாறிவிடுகின்றன. கூட்டப்புழுக்களிலிருந்து சுமார் 10 நாட்களில் தாய் வண்டுகள் தனது கூரிய அலகால் தானியத்தை குடைந்து வெளிவருகின்றன. ஆகவே தானியத்தின் மேல் காணப்படும் துவாரங்கள் வண்டுகள் வெளிவந்து துவாரங்களாகும். இப்பூச்சியின் வாழ்நாள் சுமார் 30 முதல் 45 நாட்களாகும். ஒரு வருடத்தில் வண்டுகள் சுமார் 4 முதல் 5 தலை முறைகளில் இனிவிருத்தி அடையும்.

 

புழு வண்டு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015