ஓம்புயிரி பயிர்கள் : உருளைக்கிழங்கு
அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளை துளைக்கும் (அ) இளம் கிளைகள் மற்றும் வளரும் கிழங்குகளை துளைக்கும்
- கிழங்குகள் அழுகி, கெட்ட வாசனை வெளிவரும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: இலையின் அடிப்புறத்திலும், வெளியே தெரியும் கிழங்கின் மீதும் தனித்தனியே முட்டையிடும்.
- புழு: இளம் பச்சை நிறத்தில் காணப்படும்
- கூட்டுப்புழு: குப்பைகள் (அ) நிலத்தில் (அ) பைகளில் பட்டுக் கூடுகள் காணப்படும்பூச்சி: சிறியதாக, அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
முன்னிறக்கைகள் சாம்பல் பழுப்பு நிறத்தில் அடர் நிறப் புள்ளிகளுடன் பின்னிறக்கைகள் அழுக்கு வெள்ளை நிறத்திலும் காணப்படும்
|