இதன் தாய்ப்பூச்சியும் அதன் புழுக்களும் மாவுப் பண்டங்களை உண்டு வாழ்கின்றன. இவை உடைந்த தானியங்கள் மற்றும் அரைத்த மாவுப்பொருட்களை உண்டு சேதம் விளைவிக்கின்றன. சேதப்படுத்தப்பட்ட பண்டங்களில் ஒருவித துர்நாற்றம் ஏற்படும். ஓரு தாய்ப்பூச்சி 400 முதல் 500 முட்டைகள் வரை தானியங்களின் மேலும் அல்லது தானியத்துக்கு அரகிலும் இடும். முட்டைகளிலிருந்து 2 நாட்களில் புழுக்கள் வெளிவரும். இப்புழுக்கள் வெள்ளை நிறத்துடன் லேசான மெலிந்த கோடுகளுடன் இருக்கும். இரண்டு வால் போன்ற முட்கள் உடலின் கடைசிப்பாகத்தில் அநைம்திருக்கும். இவை 13 நாட்களில் கூட்டுப் புழுக்களாகி பின்னர் 4 நாட்களில் கூட்டப்புழுவிலிரந்து தாய்ப்பூச்சிகள் சுமார் 6 மாத காலம் வரை உயிர்வாழும். இவை மழைக்காலங்களில் சுறுசுறுப்பாக காணப்படும்.
தானியத்தின் ஈரத்தன்மை 12 சதத்திற்கு மேற்பட்டால் இப்பூச்சிகள் தானியத்தை முழுமையாக சேதப்படுத்தும். வண்டுகளின் எண்ணிக்கை அல்லது இனப்பெருக்கம் அதிகமானால் இவைகள் தங்கள் இனப்பூச்சிகளையே உண்டு வாழும் குணத்தையே பெற்றுள்ளன. இதன் புழுக்கள் தாய்ப்பூச்சிகள் இடும் முட்டைகளையும் மற்றும் கூட்டுப்புழுக்களையும் உண்டு வாழும். இவ்வண்டுகள் உடலிலிருந்து ஒருவித திரவத்தை சுரந்து மாவுக்குள் விட்டு விடுவதால் பண்டங்களிலிருந்து துர்நாற்றம் வீசும். |