இவ்வண்டுகள் கோதுமை, சோளம், காய்ந்த பழவகைகள், முந்திரி வகைகள் முதலியவற்றை சேதப்படுத்துகின்றன. இந்த வண்டின் உடல் அமைப்பு நீண்டு தட்டையாக இருக்கும். சுமார் 2.5 முதல் 3.0 மி.மீ. நீளமும் உடையது. இவ்வண்டின் கழுத்து பகுதியில் ஒவ்வொருபுறத்திலும் 6 பற்களை போன்ற அமைப்பு காணப்படும். இவ்வண்டுகள் முழு தானியங்களைத் தாக்காது மற்றப்பூச்சிகளால் தாக்கப்பட்ட தானியங்களையே இவைகள் தாக்குகின்றன. தட்டையாக உடலமைப்பு இருப்பதால் இவ்வண்டுகள் எளிதாக மற்ற பண்டங்களுக்கு பரவுகின்றன. இதன் வாழ்க்கை பருவம் சுமார் 20 நாட்களாகும். |