இது நெல் அந்துப்பூச்சியைவிட அளவில் பெரியதாகவும் சாம்பல் நிறமுடையதாகவும் இருக்கும். இப்பூச்சியின் புழுக்கள் உடைந்த விதை பொருட்களையும், குறுணைகளையும் தானிய வகைகள் அனைத்தையும் நூலாம் படையினால் பின்னி, அவற்றை உண்டு சேதப்படுத்தும். ஒரு தாய்ப்பூச்சி 160 முதல் 260 முட்டைகள் வரை முட்டைகளின் மேல் இடும். அவைகளிலிருந்து 5 நாட்களில் சிறு புழுக்கள் வெளிவந்த பட்டு போன்ற நூலாம் படையினால் தானியங்களைப் பிணைந்து 60 நாட்களாகும். கூட்டுப்புழுவிலிருந்து 10 முதல் 14 நாட்களில் அந்துப்பூச்சிகள் வெளிவரும். |