இவ்வந்துப்பூச்சி குறிப்பாக மக்காச்சோளம் கதிர்களைத் தாக்குகின்றன. இப்பூச்சியின் முன் இறக்கையில் அடிப்பகுதி வெள்ளி நிறத்திலும் அதன் வெளிப்புறம் சிகப்பு மற்றும் நீலமும் பழுப்பு நிறமும் கலந்திருக்கும். பின் இறக்கைகள் பெரியதாகவும் வெள் பழுப்பு நிறத்துடன் உரோமங்களுடன் காணப்படும். இப்பூச்சியின் புழுக்கள் வெள்ளை நிறமாகவும் உடல் பகுதி முழுவதும் சிறிய மெல்லிய உரோமங்கள் காணப்படும். இப்புழுக்கள் மூட்டடைகளின் வெளியிலிருந்து கொண்டும் தானியங்களை உண்டு சேதப்படுத்தும். இதன் வாழ்க்கைப் பருவம் 26 முதல் 36 நாட்களாகும். |