சேமிப்பு கிடங்கு பூச்சிகள் :: தானிய சேமிப்பில் பூச்சிகளால் ஏற்படும் சேதாரங்கள்
காப்ரா வண்டு(Khaphra beetle) டிரோகோடெர்மா  கெரேனேரியம்

இவ்வண்டுகள் கோதுமை, சோளம், மக்காச்சசோளம், பருப்பு வகைகள் எண்ணைவித்துப் பயிர்கள், மிருகங்களின் உபபொருட்கள் மற்றும் காய்ந்த பழவகைகள் சேதப்படுத்தும், வண்டுகள் முதலில் தானியங்களின் விதை முளைப்பை உண்ண ஆரம்பித்து பின்னர் விதை முழுவதையும் சேதப்படுத்துகின்றன. இதனால் தானியங்கள் சக்கையாகி விடுகின்றன. இப்பூச்சியின் சேதம் மூட்டைகளின் மேல்பாகங்களில் மட்டுமே காணப்படுகின்றது. தாய்பூச்சி கரும்பழுப்பு நிறமாக இருக்கும்.

உடல் அளவில் முன்பகுதியைக்காட்டிலும் பின்பகுதி சற்று பெரியதாக இருக்கும். இப்பூச்சியின் இறக்கையில் கரும்பழுப்பு நிறத்தில் புள்ளிகள் காணப்படும். இதன் புழுக்கள் பழுப்பு நிறமாகவும், உரோமங்களுடன் காணப்படும். இப்புழுக்கள் மிகுந்த சுறுசுறுப்பானவை. விரைவாக செல்லும் தன்மை கொண்டவை. உணவு இல்லாத சமயங்களில்ப புழுக்கள் உடலை சுருக்கிக் கொள்ளும், மீண்டும் உணவு கிடைத்தவுடன் சுசுறுப்பாக உண்ணும். இப்புழுக்கள் சேமிப்புக்கிடங்குகளில் காணப்படும் துவாரங்கள் மற்றும் இடுக்களுக்குள்ளே சென்று மறைந்து கொள்ளும் குணம் கொண்டவை. இப்புழக்கள் கடுமையான வறட்சியான காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாககும். சுமார் 18 நாட்களில் இவை கூட்டுப்புழுக்களாகின்றன. இக்கூட்டுப்புழுக்கள் 5 நாட்களில் தாய்பூசு்சிகளாகின்றன. இப்பூச்சியின் வாழ்க்கை காலம் சுமார் 25 நாட்களாகும்.

 

பூச்சி புழு

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

| பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015