இது சாதாரணமாக அங்குமாயிஸ் தானிய அந்துப்பூச்சி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இது முதல் முதலாக பிரெஞ்சு நாட்டில் அங்குமாயிஸ் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பூச்சிகள் வயலிலும் தானியங்களைத் தாக்குகின்றன. நெல், மக்காச்சோளம், சோளம். பார்லி மற்றும் கோதுமை தானியங்களைத் தாக்குகின்றன. இப்பூச்சிகளிலும் சேதமேற்படுத்த கூடியன. கிடங்குகளில் இவைகள் தானிய மூட்டைகளின் மீது பறந்து கொண்டிருக்கும் அல்லது ஊர்ந்து கொண்டிருக்கும்.
அதிகமான தாக்குதல் உள்ள இடத்தில் சிறு சலனம் ஏற்படுத்தினாலும் நிறைய அந்துப்பூச்சிகள் பறப்பதைக் காணலாம். வண்டுகளைப் போல் அல்லாமல், அந்துப்பூச்சிகளின் புழுக்கள் மட்டுமே தானியங்களைச் சேதப்படுத்தும். தானியங்கள் முழுவதும் குடையப்பட்டு குடைந்த இடங்களில் புழுவின் சேதம் காணப்படும். இதன் தாக்குதல் நெல்லில் அதிகமானால் இறுதியில் உமி மட்டும் மிஞ்சும். இச்சிறிய அந்துப்பூச்சியின் மன் இறக்கைகள் மங்கலான மஞ்சள் நிறமாயிருக்கும். பின் இறக்கைகளில் நீண்ட உரோமங்கள் காணப்படும். அந்துப்பூச்சியில் புழுக்கள் நெல்லின் உட்பகுதியில் தங்கி உண்டு வாழும்.
புழு வெள்ளை நிறத்துடன் தலை மட்டும் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இப்புழுக்கள் 19 நாட்களில் நன்கு வளர்ச்சியடைந்து தானியத்தில் உள்ளேயே கூட்டு புழுவாக மாறுகின்றது. இக்கூட்டுப்புழுவிலிருந்து 5 நாட்களில் தாய்ப்பூச்சிகள் நெல்லிருந்து சிறிய துவாரத்தின் மூலம் வெளிவரும். |