ஆந்த்தராக்னோஸ்/பறவை கண் வடிவப் புள்ளிகள்: எல்சினோ ஆம்பலீனா
அறிகுறிகள்:
- திராட்சை பழங்களில் சிறிய சிவப்பு நிற வட்ட வடிவப் புள்ளிகள் முதலில் தோன்றும்.
- புள்ளிகளின் நடுப்பகுதிகள் வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் மாறியும் அதைச் சுற்றி குறுக்கே சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிற விளிம்புகள் காணப்படும்.
- நைவுப்புண் மேல் ஒரே சீராக பூசணம் தோன்றும்
- தொடர்ந்து ஈரப்பதம் உள்ள பருவங்களில் இளஞ்சிவப்பு நிற பூசண வித்துக்களில் கசிவு ஏற்படும்
- 24 மணி நேரம் அல்லது அதை விட அதிக நேரம் ஈரப்பதத்தில் இருப்பதும், 36º பாரன்ஹீட் வெப்பநிலையில் இருந்தால் நோய் தாக்குதல் ஏற்படும்.
- மழைத் தூறல்களால் நோய்கள் எளிதில் பரவும்.
|
|
சிவப்பு நிற வட்ட வடிவப் புள்ளிகள் |
வெள்ளை கலந்த சாம்பல் நிற புள்ளிகள் |
கட்டுப்பாடு:
- நோய் தாக்கப்பட்ட இலைகள் மற்றும் கொம்புகளை வெட்டி எரித்து விட வேண்டும்.
- 2.5 கிலோ ஃப்பெர்ரஸ் சல்பேட் மற்றும் 0.5 நீர்ம அளவு கந்தக அமிலத்தை 4.5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
- 1.0% பி.எம் (அ) 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைட் (அ) 0.1% கார்பன்டாசிம் (அ) 0.2% மேன்கோசெப் (அ) 0.2% டைஃபோலேட்டன் (அ) 0.2% க்ளோரோதலோனில் (அ) 0.1% பிட்டர்டெனால் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்.
- எதிர்ப்புத் திறனுள்ள இரகங்கள் – பெங்களூர் ப்ளு, பியூட்டி சீட்லெஸ், பாரத் ஏர்லி, கோல்டன் குயின், வார்ஜ் ஒயிட்
|