போபரிடிஸ் குலை அழுகல் அல்லது திராட்சையின் சாம்பல் பூசணம்: போட்ரிடிஸ் சினேரியா
அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட பழங்கள் முதலில் மென்மையாகவும், நீர் போன்றும் காணப்படும்.
- தாக்கப்பட்ட வெள்ளைப் பயிர்வகை பழங்கள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்து விடும்
- ஊதா நிறப் பயிர் வகைகள் ஆழ்ந்த சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
- ஆரோக்யமான பழங்கள் நோய் தாக்கப்பட்ட பழங்களின் மேல் உரசினால் அந்தப் பழங்களும் பாதிக்கப்படும்.
- அழுகிய பழங்கள் கெட்டியாக காய்ந்து கீழே விழுந்து விடும்.
கட்டுப்பாடு:
- மழைக் காலங்களுக்கு முன் ஒரு மாத கால இடைவெளியில் 0.2% கேப்டான்னை மூன்று முறை தெளித்தால் அறுவடை முன் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
போபரிடிஸ் குலை அழுகல் |
|