நீலம் பூசணம் அழுகல்: பெனிசீலியம் டிஜிடேட்டம்
அறிகுறிகள்:
- வெள்ளை நிறத்தில் வளர்ச்சி குன்றியும், நீலம் கலந்த பச்சை நிறத்தில் நிறம் மாறியும் காணப்படும்.
- பழங்கள் அழுகிவிடும்
- நோய் தாக்கப்பட்ட பழங்கள் மென்மையாகவும், நீர் போன்றும் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட பழங்களில் இருந்து பூசணம் பிடித்தது போன்ற நாற்றத்தை வெளிப்படுத்தும்.
|
|
|
வெள்ளை நிற பூசணம் |
நீல நிற பூசணம் |
அழுகிய பழங்கள் |
கட்டுப்பாடு:
- மென்மை அழுகல் நோயைக் குறைக்க பழுத்த பழங்கள் அடிப்படுவதை தவிர்க்க வேண்டும்.
- விதை குச்சிகளை சுத்தம் செய்யும் நோய் தாக்கிய குச்சிகளை நீக்கி எரித்துவிடவும். துளிர் வரும் போதே பூசணக்கொல்லியை தெளிக்க வேண்டும் அல்லது வெப்ப நிலை குளிர்ந்த நிலையில் உள்ள போது தெளிக்கவும். குளிர் காலங்களில் சல்பர் தெளித்தால் புதிய நோய்கள் தாக்காது.
|