ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: ஆப்பிள் |
ஆப்பிள்
சாகுபடி முறை :
- குளிர் காலத்தில் தண்டுகளையும், கிளைகளையும். வெட்டி அழித்தால் தண்டு துளைப்பான் தாக்குதல் குறையும்
- டென்ட் கம்பளிப்புழுக்களின் முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்கவேண்டும்
இரசாயன முறை :
- குளோர்பைரிபாஸ் 25 கிலோ / எக்டர் மண்ணில் போட்டால் வேர் துளைப்பான் மற்றும் வெட்டு வண்டுகளை அழிக்கலாம்
- கார்பன்டைசல்பைடு அல்லது பெடரோல் மரத்துவாரத்தினுள் ஊற்றி களிமண்ணால் அடைத்து விட்டால் மரத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
- டைமிதோயேட் (அ) மோனேபகுரோட்டோபாஸ் (அ) பாஸ்பாமிட்டான் (0.03 சதவிதம்) - பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தெளித்தால் இலைகளைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்
உயிரியல் கட்டுப்பாடு :
- அபிலினஸ் மலி இரைவிழுங்கியை விட்டு ஆப்பில் பஞ்சு அசுவினியை கட்டுப்படுத்தலாம்
- பிராஸ்பால்டெல்லா பெர்னசியோசி ஒட்டுண்ணியை விட்டு சான்ஜோஸ் செதில் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
|
|