உளுந்து
பூச்சி மற்றும் நோய் கண்காணித்தல்:
- வாரம் ஒரு முறை தாவர வளர்ச்சி, பூக்கும் பருவம், மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் ஹிரியோதிஸின் தாக்குதலை கண்காணிக்க வேண்டும்
- ஹிரியோதியை கண்காணிக்க இனக்கவர்ச்சியை பொறியினை எக்டர்க்கு 5 என்ற எண்ணிக்கையில் வைக்கவும்
விதைக்கும் முன் பருவம்:
- கனத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும்
- முன்பாகவே விதைக்க வேண்டும்
- எதிர்த்து வளரக்கூடிய அல்லது தாங்கி வளரக்கூடிய இரகங்களை வளர்க்கலாம்
- சரியான நேரத்தில் நீர்பாய்ச்ச வேண்டும்
- போரேட் அல்லது கார்போபியூரான் குருளைகள் எக்டர்க்கு 1 கிலோ வீதம் மண்ணில் போட வேண்டும்
விதைக்கும் பருவம்:
- சரியான நேரத்தில் விதைப்பு, சரியான விதை அளவு மற்றும் உர மேலாண்மை இருந்தால் நம்முடைய விருப்பப்படி பயிர் விளைவிக்கலாம்
- முதல் 4 - 6 வாரங்களில் இடைச்சாகுபடி மற்றும் கையால் களையெடுத்தால் களைகள் இல்லாமல் வைக்கலாம்
தாவர வளர்ச்சிப் பருவம்:
- முதல் அல்லது இரண்டாவது பருவ புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்
- கம்பளிப் புழுக்களுக்கு விளக்குப் பொறி மிகவும் நல்லது.
|