முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: எலுமிச்சை

எலுமிச்சை

சாகுபடி முறை:

  • அக்டோபர், டிசம்பர் மாதங்களில் செதிள் பூச்சி மற்றும் தண்டு துளைப்பானின் தாக்கிய கிளைகளை வெட்டி அழித்துவிடவேண்டும்
  • கீழே விழுந்த பழங்களை சேகரித்து மழித்தால் பழஈயை அழித்துவிடலாம்
  • காக்குலஸ் வில்லோசஸ், காக்குலஸ் பென்குலஸ் மற்றும் காக்குலஸ் ஹிர்சுடம் ஆகிய களைகள் பழ உறிஞ்சி பூச்சிகளுக்கு காற்று இடமளிப்பதால் அவற்றை அழித்துவிடவேண்டும்

இரசாயன முறை:

  • மெத்தில் டெமட்டான் (0.03 சதவிதம்) பத்து நாட்கள் இடைவெளியிட்டு தெளித்தால் பூச்சியின் தாக்குதல் குறையும்
  • தையோடெமட்டான் (0.05 சதவிதம்) அல்லது டைக்கோபாஜ் (0.05 சதவிதம்) பத்து நாட்கள் இடைவெளியிட்டு தெளித்தால் சிலந்தியின் தாக்குதல் குறையும்
  • பெட்ரோல் அல்லது டைகுளோர்பாஸ் அல்லது அலுமினியம் பாஸ்பைட் வில்லையை மரத் துவாரத்தினுள் போட்டு களிமண் வைத்து மூடிவிட்டால் தண்டுதுளைப்பானை கட்டுப்படுத்தலாம்
  • வெல்லத்தினை தண்ணீரில் கரைத்து மாலத்தியானுடன் கலந்து பொறியாக வைத்தால் பழஈயைக் கட்டுப்படுத்தலாம்

உயிரியல் முறை:

  • கிரிப்டோலெமஸ் மான்ட்ரொசெரி பொறிவண்டை விட்டால் மாவுப்பூச்சி தாக்கம் குறையும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015