வரையறை :
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பொருளாதார, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் இடர்களை குறைக்கும் வகையில் உயிரியல், பாரம்பரிய, இயற்பியல் மற்றும் இரசாயன கருவிகளை இணைப்பதன் மூலம் பூச்சி மேலாண்மையின் ஒரு நிலையான அணுகுமுறையை ஏற்படுத்துவதாகும்.
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் நோக்கங்கள் :
- செயற்கை கரிம பூச்சிக் கொல்லிகளை குறைத்தல்
- அவை சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதை தடுத்தல்
- பூச்சிகளால் மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைப்பதை தடுத்தல்
- இலாபத்தை மீண்டும் முதலீடு செய்தல்
- பாதுகாப்பான உணவுகளை வழங்குதல்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் கொள்கைகள் :
- முக்கிய பூச்சிகள் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அடையாளம் காணுதல்
- மேலாண்மை அலகு மற்றும சுற்றுச் சூழல் வரையறுத்தல்
- மேலாண்மை உத்திகளை மேம்படுத்துதல்
- பொருளாதார வரம்புகளை உருவாக்குதல் (இழப்பு மற்றும் இடர்)
- மதிப்பீடு தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்
- பூச்சி மாதிரிகளை உருவாக்குதல்
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் கருவிகள் :
மேற்பார்வை :
பூச்சிகள் மற்றும் அதன் சேதங்களை பதிவு செய்தல், இவை தற்போதைய பூச்சிகள் மற்றும் பயிர் நிலையைப் பற்றிய அறிவை வழங்குகிறது மற்றும் இவை பூச்சி மேலாண்மை முறைகளை தேர்வு செய்ய பயனுள்ளதாக உள்ளது.
பூச்சி எதிர்ப்பு வகைகள் :
பூச்சி எதிர்பிற்கான இனவிருத்தி தொடர்ச்சியான செயல்முறையாகும்.
பாரம்பரிய பூச்சி கட்டுப்பாடு :
பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக பயிர் சூழலில் நோய்கள் கட்டுப்படுத்துதல் இதில் அடங்கும். பயிர் சுழற்சி, மூடுபயிர், வரிசை மற்றும் பயிர் இடைவெளி, நடவு மற்றும் அறுவடை தேதிகள், பயிர் குப்பைகளை அகற்றுதல் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும். பாரம்பரிய கட்டுப்பாடு நோய் உயிரியல் மற்றும் மேம்பாட்டைப் பொருத்தது.
இயந்திரக் கட்டுப்பாடு :
இவை நோயின் தன்மை பற்றிய அறிவை பொருத்தது. கைகளால் பொருக்கி எடுத்தல், பறவை உட்காரும் இடங்களை நிறுவுதல், ஈரப்பாதுகாப்பு மூட்டம் மற்றும் பொறிகளை நிறுவுதல் ஆகியவை எடுத்துக்காட்டுகளாகும்.
உயிரியல் கட்டுப்பாடு:
இம்முறை நோய்க் கிருமிகளின் இயற்கை எதிரிகளை பெருக்குவதன் மூலம் நோய்க் கிருமிகளை கட்டுப்படுத்துவதாகும். பூச்சிகளை உண்பவை, பூச்சியின் ஒட்டுண்ணி, பூச்சிகள் மற்றும் களை உண்ணி ஆகியவை இதில் அடங்கும்.
இரசாயன கட்டுப்பாடு :
பூச்சிக் கொல்லிகள், பூச்சியின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இவை பூச்சிகள் சேதத்தை ஏற்படுத்த ஆரம்பித்த உடனே பயன்படுத்த வேண்டும். |