ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: மாம்பழம் |
மாம்பழம்
சாகுபடி முறை:
- விழுந்து கிடக்கும் பழங்களை சேகரித்து அழிக்கவேண்டும். ஏனென்றால் இவ்வாறு வெய்தால் கூன்வண்டு மற்றும் பழஈ போன்றவை பரவாமல் தடுக்கலாம்
- மரத்தை சுற்றியும் நன்கு கோடை உழவு செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் மாவுப்பூச்சியின் முட்டைகளையும், பழஈ யின் கூட்டுப்புழுக்களையும் அழித்துவிடலாம்
- கிளிரோடென்ட்ரான் இன் பார்சுனேட்டம் மற்றும் புல்களை அகற்றினால் மாவுப்பூச்சியின் எண்ணிக்கையை குறைக்கலாம்
இரசாயன முறை:
- பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து 3 வாரத்திற்கு ஒருமுறை மோனோகுரோட்டோபாஸ் நான்கிலிருந்து ஜந்துமுறை தெளித்தால் தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, பழஈ மற்றும் கூன் வண்டுகளை அழிக்கலாம்
- மோனோகுரோட்டோபாஸ் (0.01 சதவிதம்), பென்பலரேட் (0.01 சதவிதம்), பெர்மெத்ரின் (0.02 சதவிதம்), டைமிதோயேட் (0.06 சதவிதம்) ஏதாவது ஒரு மருந்தினை 21 நாட்கள் இடைவெளியிட்டு இரண்டிலிருந்து மூன்றுமுறை தெளித்தால் இலை கொத்துப்புழு, தண்டு துளைப்பான், சில்லிட் ஆகியவற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
- இடிசிடி கலப்பு அல்லது பெட்ரோல், மண்ணென்ணெய் ஆகியவற்றை டைகுளோர்பாஸ் அல்லது மோனோகுரோட்டோபாஸ் (0.05 சதவிதம்) கலந்து, மரத்துவாரத்தினுள் உள்ளவற்றை சுத்தம் செய்து, மருந்தை உள்ளே ஊற்றவேண்டும். பின்பு மரத்துவாரத்தை மண்சக்தியைக்கொண்டு அடைத்தால் மாமரத்தண்டு துளைப்பானை கட்டப்படுத்தலாம்
உயிரியல் கட்டுப்பாடு:
- உயிரியல் கட்டுப்பாடு மறை நன்கு பயன்தராது.
|
|