கடுகு :
பூச்சி மற்றும் நோயைக் கண்காணித்தல்:
- பூச்சி மற்றும் நோய் பெருக்கத்தினை கண்காணிக்க வேகம் மற்றும் தீவிர கள ஆய்வு செய்ய வேண்டும்
- ஒவ்வொரு 5 லிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் எக்டர்க்கு 12 இடங்களில் ஆய்வுக்கு வெல்லும் இரு புறங்களிலும் கண்காணிக்க வேண்டும்
- ஒரு இடத்திற்கு 5 இடங்களில் பூச்சி மற்றும் நோய்களை பதிவு செய்ய வேண்டும்
- அடிவிளியின் எண்ணிக்கை கண்காணிக்க மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைக்கலாம்
விதைக்கும் முன் பருவம்:
- மண்மூலம் பரவும் கிருமிகள் மற்றும் மண்ணுக்குள் இருக்கும் புழுக்களை நன்கு கோடை உழவு பாகங்களை அழித்து விடவேண்டும்
- வேண்டாத தாவர பாகங்கள் மற்றும் உதிர்ந்த பாகங்களை அழித்துவிட வேண்டும்
- முன்பே விதைத்தால் கடுகு அசுவினி மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்
- வேர்முடிச்சு நோயைக் கட்டுப்படுத்த, மண்ணுடன் சுண்ணாம்பு 1 கிலோ / சதுர மீட்டர்க்கு கலந்து மண்ணின் கார அமில நிலையை 7.2க்கு கொள்ளு வரலாம். அல்லது வேப்பம் புண்ணாக்கு 0.5 கிலோ / சதுரமீட்டர்க்கு போடலாம்
விதைக்கும் பருவம்:
- விதைத்து நான்கு வாரம் கழித்து நீர்பாய்ச்சினால் வர்ணமயமான நாவாய்பூச்சியினை கட்டுப்படுத்தலாம்
- மாலத்தியான் 1000மி.லி தெளிக்கவும்.
- களைகளை நீக்கி பயிரை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்
- வேர் அழுகல் நோய்க்கு மேன்கோசெல் 1 - 1.5 கிலோ / எக்டர் எடுத்து 750 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்
- நோய் தாக்கிய தாவரங்களை நீக்கவும்
பயிர் வளரும் பருவம்:
- புழுக்களை சேகரித்து அழித்துவிட வேண்டும்
- லெபிடாப்டிரன் பூச்சிகளை கண்காணிக்க விளக்குப்பொறி பயன்படுத்தவும்
- இலைப்புள்ளி மற்றும் பாக்டிரியா அழுகல் நோய்க்கு ஸ்ரெப்டோசைக்லின் 500 பிபிஎம் தெளிக்கவும்
- நாற்று அழுகல் மற்றும் ஆல்டெர்னெரியா இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 0.2 சதவிதம் அல்லது கார்பென்டாசிம் 0.05 சதவிதம்
- சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த 0.2 சதவிதம் கந்தகத்தினை தெளிக்கவும்
பூக்கும் பருவம்:
- உதிர்ந்த மொட்டுகளையும், பூக்கொப்பளங்களையும் எடுத்து அழித்துவிட வேண்டும்
- பூவிலை நோயைத் தாக்கிய தாவரங்களை அகற்ற வேண்டும்
- மொட்டுப் பிடிக்கும் தருணத்தில் டைமிதோயேட் 0.03 சதவிதம் அல்லது என்டோசல்பான் 0.07 சதவிதம்
காய்க்கும் பருவம்:
- பூவிலைநோய் தாக்கிய பயிர்களை வேரோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும்
- குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) டைமிதோயேட் 0.03 சதவிதம் (அ) குயினால்பாஸ் 150 - 200 லிட்டாஸ் ஏதேனும் ஒரு மருந்தினை எடுத்து ஒரு எக்டர்க்கு தெளிக்கலாம்
- வர்ணமயமான பூச்சி மற்றும் கடுகு குளவியைக் கட்டுப்படுத்த மெத்தில் பாரத்திலானை (25 கிலோ / எக்டர்) தெளிக்கவும்
- வாரத்திற்கு இரண்டு முறை இணைத்து வாம் புழுக்களை சேகரித்து அழித்துவிடலாம்
- ஆல்டெர்னெரியா இலைப்புள்ளி, வெள்ளை துரு, மற்றும் இதர நாற்று நோய்களைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதவிதம் (அ) ஏப்ரான் 6 கிராம் / கிலோ விதைக்கு பயன்படுத்தலாம்
பயிர் வளரும் பருவம்:
- கடுகு குளவிகளைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 500மி.லி அல்லது என்டோசல்பான் 625 மி.லி அல்லது குளினால்பான் 150 - 200 லிட்டர் / எக்டர் தெளிக்கவும்
- இணைந்து வாழும் புழுக்களை சேகரித்து அழித்துவிடலாம்
- மெதில் பாரத்தியான் 5 சதவிதம் 25 கிலோ / எக்டர்க்கு தெளிக்கவும்
- நோய் தென்பட்டால் மெடலாக்லலிஸ் 8 சதவிதம் + மான்கோசெப் 64 சதவிதம் 25 கிலோ / எக்டர்க்கு தெளிக்கவும் (அ) மேன்கோசெப் 1500 - 2000 கிராம் / எக்டர்க்கு தெளிக்கவும்
பூக்கும் பருவம்:
- அசுவினி தாக்கிய முதல் பருவத்திலே அழித்துவிட வேண்டும்
- ஆக்ஸிடெமட்டான் மெதில், டைமிதோயேட், என்டோசல்பான், குயினால்பாஸ், மாலத்தியான் 625 - 1000மி.லி / எக்டர்க்கு தெளிக்கவும்
- இணைந்து வாழும் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்
காய்க்கும் பருவம்:
- அசுவினியைக் கட்டுப்படுத்த இரசாயன முறையைக் கையாளவும்.
|