ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: நெல் |
நெல்
சாகுபடிமுறை:
- களத்தை சுத்தமாக வைக்க வேண்டும்
- மீதம் உள்ள தாள்களை அகற்றிவிட வேண்டும், அப்படி செய்தால் துளைப்பானின் எண்ணிக்கையை அடுத்த பயிருக்கு தாக்குவதை குறைத்து விடலாம்
- கோடை உழவு செய்யவேண்டும்
- முட்டைக் குவியல்களை கையால் எடுத்து அழிக்கவேண்டும்
- விதைப்பை தள்ளிப்போட்டால் ஆளைக்கொம்பன் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம்
- புழுவால் மடக்கப்பட்ட இலைகளை கிள்ளி எரிய வேண்டும். அப்படி செய்தால் புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
- விளக்குப்பொறி அமைத்தால் தத்துப்பூச்சி மற்றும் இலை மடக்குப்புழு எண்ணிக்கையை குறைக்கலாம்
இரசாயன முறை:
- 0.02 சதவிதம் குளோர்பைரிபாஸ் மற்றும் 1 சதவிதம் யூரியாவுடன் நாற்றுகளின் வேர்களை நான்கு மணி நேரம் முக்கி எடுத்து பின்னர் நடவேண்டும்
- 15 நாட்களுக்கு நட்ட பிறகு குயினால்பாஸ் குருணைகளை 1 கிலோ / எக்டர்க்கு போடவேண்டும்
- 7 நாட்கள் இடைவெளியிட்டு இரண்டு முறை குயினால்பாஸ் அல்லது பாஸ்பாமிடான் 0.5 கிலோ / எக்டர்க்கு தெளித்தால் இளம் புழுக்களை அழிக்கலாம்
- கதிர்நாவாய் பூச்சிகயைக் கட்டுப்படுத்த மாலத்தியான் பவுடரை போடவும்
- நூவான் 0.5 கிலோ எடுத்து சூரியன் மறைந்த பிறகு படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த தெளிக்கலாம்
உயிரியல் கட்டுப்பாடு:
- தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு பாரம் இடைவெளியில் 50,000 ட்ரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் ஒட்டுண்ணிகளை களத்தில் விட்டு கட்டுப்படுத்தலாம்
- சிரிடோரைனஸ் லிவிடிபெனிஸ் 50 - 75 முட்டைகள் / சதுர மீட்டர்க்கு விடலாம்
|
|