ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை :: கரும்பு |
கரும்பு :
- தண்டுதுளைப்பான், செதில் பூச்சி மற்றும் மாவுப்பூச்சி இல்லாத நல்ல கரும்பு கட்டைகளை நடுவதற்கு சேர்வு செய்யவேண்டும்
- பூச்சிகளால் தாக்கப்பட்ட கரும்பு கட்டைகளை மாலத்தியான் 0.1 சதவிதம் வைத்து உரசவேண்டும்
- நடும்பொழுது சால்பகுதியில் என்டோசல்பான் 1 அல்லது 1.25 விட்டர் எக்டர்க்கு தெளித்தால் கரையானையும், தண்டு துளைப்பானையும் குறைக்கலாம்
- பெப்ரவரி - மார்ச் மாதங்களில் கண்களில் தென்படும் தண்டு துளைப்பான்கள் மற்றும் தத்துப்பூச்சிகளின் முட்டைகளை கையில் எடுத்து அழித்துவிடவேண்டும்
- மே மாத துவக்கத்திலிருந்து வெள்ளைப்புழு தாக்கத்தை கண்காணிக்கவேண்டும்
- ஜீன் மாத கடைசியில் அல்லது ஜீலை துவக்கத்தில் எங்கு மேல் தண்டு துளைப்பான் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் கார்போபியூரான் குருணை 1 கிலோ / எக்டர்க்கு கரும்பின் அடிப்பகுதியில் போடவேண்டும். அதைத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்
- பைரில்லா தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் ஒட்டுண்ணிகளை இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் விட்டுவிடவும் இல்லையென்றால் மாலத்தியான் 1 மி.லி / எக்டர்க்கு எடுத்து தெளிக்க வேண்டும்
- சிலந்தியின் தாக்குதல் இருந்தால் தாக்கப்ட்ட இலைகளை கிள்ளி எறிய வேண்டும். தாக்கம் அதிகமாக இருற்தால் டைக்கோபால் 0.1 சதவிதம் தெளிக்க வேண்டும்
- அறுவடை செய்த பின்பு மீதம் உள்ள கரும்பு தாள்களில் புழுக்கள் இருந்தால் பூச்சிக்கொல்லி மருந்தினை செலுத்தி அழிக்க வேண்டும்
|
|