பயிறு வகைகள்
பயிறுவகைகள் கீழ்கண்ட செயல்பாடுகள் பூச்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன (உளுந்து, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, தட்டைப்பயிர்)
- தட்டைப்பயிரை ஜீலை மாதத்தின் நான்காவது வாரமும், ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரமும் விதைத்தால் பூச்சிகளும், மஞ்சள் தேமல் நோயும் குறைந்து காணப்படும்
- துவரையில் உளுந்து மற்றும் தட்டைப்பயிரை ஊடுபயிர் செய்தால் பச்சைத்தத்துப்பூச்சி, பச்சைப்பூச்சி, வண்டுகள், வெள்ளை ஈ, கம்பளி புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பானின் தாக்கம் சற்று குறைவாகத் தோன்றும்
- உளுந்தில் சோளம் மற்றும் எள்ளு ஊடுபயிலாகப் பயிரிட்டால் தத்துப்பூச்சியின் தாக்கம் குறையும்
- பச்சைப்பயிறு, எம்.எல் 337, எம்.எல் 423, எம்.எல் 428, தட்டைப்பயிறு, வி - 16, வி - 18, வி - 19 ஆகிய எதிர்ப்பு இரகங்களை பயிரிடலாம்.
|