பயிர் பாதுகாப்பு :: மலர்ப் பயிர்கள்


மலர்ப் பயிர்கள்:

கனகாம்பரம் நூற்புழு : பிராட்டிலிங்கஸ் டிலாட்ரியை

அறிகுறிகள்:
கண்ணுக்குப் புலப்படாத நூற்புழுக்கள் வேர்களைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சுவதால் செடி வளர்ச்சி குன்றி வாடிப் போகும். வேர்ப்பாகம் அழுகி கரும்புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்பாடு:

நாற்று நடும்போது கார்போஃபியூரான் குறுணை மருந்தை ஏக்கருக்கு 12 கிலோ மண்ணில் இடலாம். தாக்கப்பட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள செடிகளுக்கு ஃபோரேட் 10 சத குறுணை (ஏக்கருக்கு 10 கிலோ) போடலாம்.

சம்பங்கி நூற்புழு : மிலாய்டோகைனி இன்காக்னிட்டா

அறிகுறிகள்:
வேர்களில் சாறு உறிஞ்சப்படுவதால், பயிர் வளர்ச்சி குன்றி, மலர் மகசூல் குறையும். வேர்களில் உருண்டையான முடிச்சுகள் காணப்படும்.

கட்டுப்பாடு:

செடிக்கு 2 கிராம் வீதம் கார்போஃபியூரான் 3 சதக் குறுணை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013