சிறு தானியங்கள் :
சோளம் நூற்புழு மேலாண்மை
சோளத்தை தாக்கும் நூற்புழுக்கள்
சோளம் ஸ்டிங் நூற்புழு, குட்டைவேர் நூற்புழு, லீசன் நூற்புழு மற்றும் வளைய நூற்புழு போன்றவற்றிற்கு விருந்தோம்பிப் பயிராகும். இந்த நூற்புழுக்களால் சேதம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் ஒரே பயிரை பல வருடங்களுக்குத் தொடர்ந்து பயிர் செய்தால் பாதிப்பு ஏற்படும். சிறு தானியங்களிலிருந்து சோளம் நூற்புழுக்களை பகிர்கின்றது. இந்த பயிர்கள் ஒரே நிலத்தில் பயிரிடப்பட்டால் சோளம் நூற்புழுக்களால் பாதிக்கப்படும்.
அறிகுறிகள் :
வளர்ச்சி குறைதல், தண்டுகள் மெலிதாகுதல், முதிர்வதற்கு முன்பே மிதமான வெப்பநிலையிலேயே வாடுதல் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை நூற்புழுக்களால் ஏற்படும். பாதிப்பின் அறிகுறிகள், நூற்புழுக்களின் எண்ணிக்கை விளை நிலத்தில் வெகு குறைந்த தூரத்திலேயே மாறுபடுகின்றன. வளர்ச்சி குறைதல், உற்பத்தி குறைதல் மற்றும் மற்ற அறிகுறிகள் வடிவம், அளவு போன்றவற்றில் மாறுபடும்.
மேலாண்மை :
நூற்புழு மேலாண்மை கருவியாக சோளத்தை மற்ற பயிர்களுக்கு பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம். நச்சு, குட்டை வேர் மற்றும் வேர் நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட நிலத்தில் சோளத்தை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடாது. இருப்பினும் இது பயிர் சுழற்சிக்கு ஏற்ற பயிர். சில நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. பல சோள வகைகள் நூற்புழுக்களை தக்க வைப்பதில்லை. பருத்தி, சோளம் மற்றும் பல காய்கறி பயிர்கள் உற்பத்திக்கு நல்ல மேலாண்மை பயிர்.
நூற்புழுக் கொல்லி :
- நூற்புழுக் கொல்லி சோளம் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இரசாயன கொல்லிகளை பயன்படுத்த நூற் புழுக்களின் அளவை தீர்மானிக்க சோளத்தை பற்றிய போதுமான ஆராய்ச்சி தகவல்கள் இல்லை. ஆனால் அதிக அளவிலான நூற்புழுக்களை தோராயமாக ஆராய்ந்து நூற்புழுக் கொல்லிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒப்பிடும்பொழுது மக்காச் சோளத்தை விட சோளத்தில் நூற்புழு அளவு குறைவு. மற்ற பயிர்களைப் போல இரசாயன மருந்து அளிப்பது இதில் எளிது மற்றும் அதிக மகசூல் பெற முடியும்.
- டெமிக் சூத்திரங்கள் சோளத்தில் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், நூற்புழுக் கொல்லிகளை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் உள்ளன.
- டெமிக்கை விளைநிலத்தில் ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
- ஒரு ஏக்கருக்கு ஏழு பவுண்டுகளுக்குமேல் உபயோகப்படுத்தக் கூடாது.
- உபயோகப்படுத்தியபின் 90 நாட்களுக்கு சோளத்தை அறுவடை செய்யக் கூடாது.
- அறுவடைக்கு முன் கால்நடைகளை மேய அனுமதிக்கக் கூடாது.
- டெமிக் குறிப்பில் குறிப்பிடாத மற்ற பயிர்களை டெமிக் சிகிச்சை அளித்த மண்ணில் பத்து மாதங்களுக்கு பயிரிடக் கூடாது.
- டெமிக்கை பின்பற்ற புளோரிடா வேளாண்துறை மற்றும் நுகர்வோர் சேவை நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
- டெமிக் பயன்படுத்துவதற்கு 30 நாட்கள் முன்பாக டெமிக் பயன்பாட்டு அறிக்கையை FDAC ல் பதிவு செய்ய வேண்டும்.
- டெமிக்கை குடிநீர் கிணற்றுக்கு 300 அடி அருகில் பயன்படுத்தக் கூடாது.
- கிணறு 300 அடி அருகில் இருந்தால் அது மனித நுகர்விற்கு தகுதியற்றதாகி விடும்.
|