எண்ணெய் வித்துப் பயிர்கள்:
கோடையில் ஆழ உழவு செய்து 1 மாத காலம் தரிசாக விடுதல். நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத் தன்மையுடைய இரகங்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்தல். மிளகாய், சோளம் மற்றும் புகையிலை போன்ற பயிர்களுடன் பயிர்ச்சுழற்சி செய்தல்.
ஆமணக்கு:
மொச்சை வடிவ நூற்புழுவால் அதிக அளவில் தாக்கப்படும் ஆமணக்குப் பயிரை உரிய வளர்ச்சி இல்லாமல், குறைவாக காய்பிடிக்கும் திறன் கொண்ட செடிகள் மூலம் கண்டறியலாம்.
கோடையில் ஆழ உழவு செய்து நீண்ட காலம் தரிசாக விடுவதன் மூலம் இந்நூற்புழுக்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
எள்:
இப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்களில் முட்டைக்கூடு நூற்புழு முக்கியமானதாகும்.
அறிகுறிகள்:
- வெளிறிய நிறத்துடன் திட்டுத் திட்டாக ஆங்காங்கே காணப்படும் பாதிக்கப்பட்ட செடிகள்
- செடிகளின் வளர்ச்சி குன்றுதல்
- குறைவான எண்ணிக்கையுடன் கூடிய சோடையான காய்கள்
கட்டுப்பாடு:
-
கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ வீதம் விதை விதைத்த 15 – 30 நாட்களுக்குள் இடுதல்.
|