பயிர் பாதுகாப்பு :: புதிய பி.டி. தொழில்நுட்பம்

பி.டி. தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்படும் விளைவு

பி.டி. யால் மனிதனுக்கு ஏற்படும் விளைவு ஏதும் இல்லை.
பி.டி. கிரிஸ்டல் புரதம் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பூச்சி குடும்பத்திற்கு மட்டுமே நச்சுத்தன்மையை உருவாக்கக் கூடியது. இதுதான் பி.டி. கிரிஸ்டல் புரதத்தின் சிறப்பு தன்மை. இந்த கிரிஸ்டல் புரதம் காரத்தன்மை உடைய (பி.எச்.10.5) உணவு குடலில் ஒரு குறிப்பிட்ட அல்லது சிறப்பு தொடர்பு பகுதியில் மட்டும் ஒட்டும் தன்மை கொண்டது. இந்த ஒட்டுதலால் நச்சு ஏற்படுத்தப் படுகிறது. இந்த சிறப்பு தொடர்பு பகுதியில் மட்டும் ஒட்டும் தன்மை கொண்டது. இந்த ஒட்டுதலால் நச்சு ஏற்படுத்தப்படுகிறது. இந்த சிறப்பு தொடர்பு பகுதி சில குறிப்பிட்ட (லெபிடாப்டிரன்) பூச்சி குடும்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சிறப்பு தொடர்பு பகுதி மற்ற பூச்சி குடும்பத்திற்கோ, விலங்கிற்கோ அல்லது மனிதனுக்கோ நச்சுத்தன்மை அல்லது தீங்கு ஏற்படுவதில்லை. எனவே பி.டி. கிரிஸ்டல் புரதத்தினால் ஒரு உயிரிக்கு தீங்கு அல்லது நச்சு ஏற்பட வேண்டுமானால் அந்த உயிர் சிறப்பு தொடர்பு பகுதியை தன் காரத்தன்மை உடைய(பி.எச். 10.5) உணவு குடலில் பெற்றிருக்க வேண்டும். மேலும் மனிதனின் உணவு மண்டலம் அமிலத்தன்மை கொண்டது.
ஆய்வக சோதனையில் 18 நபர்கள் 1 கிராம்  பி.டி. நுண்ணுயிரியை 5 முறை 10 நாட்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டும் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டும் இருந்த போது அந்த நபர்களுக்கு கிரிஸ்டல் புரதத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த  பி.டி.  உருவாக்கக் கூடிய கிரிஸ்டல் புரதம் செரிமான நொதியால் மனித உணவு மண்டலத்தில் விரைவில் சிதைக்கப்படுகிறது.

பி.டி. யால் மண்வளம் மற்றும் நிலத்தடி நீரில் விளைவு:

மண்ணில் பி.டி.கிரிஸ்டல் புரதம் மிதமான நிலைப்பு தன்மை உடையது. பி.டி.கிரிஸ்டல் புரதம் மண் துகள்களுடன் ஒட்டிக்கொள்வதால் நிலத்தடி நீருடன் கலப்பதில்லை. ஆதலால் நீரின் தூய்மை கெடுவதில்லை. அமிலத்தன்மை உடைய மண்ணில் இந்தப்புரதம் நிலைத்திருப்பதில்லை. சூரிய ஒளியில் இப்புரதம் படும்போது சூரிய ஒளியில் உள்ள U.V. அலைக்கற்றையால் விரைவாக சிதைக்கப்படுகிறது. பி.டி. உருவாக்கும் கிரிஸ்டல் புரதம் மண்ணில் மூன்று முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும் பின்பு மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் கிரிஸ்டல் புரதம் சிதைக்கப்படுகிறது. பி.டி. மரபணு உடைய பயிர் பயிரிடப்பட்ட நிலத்தில் உள்ள மண் நுண்ணுயிரிகளின் வகை மற்றும் எண்ணிக்கையில் எந்த வித பாதிப்பு மற்றும் வேறுபாடும் காணப்படவில்லை.                              


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015