பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
சையனைடு கூட்டு

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

சோடியம் சையனைடு

கசப்பான, உறைப்பான, எரியும் சுவை, தொடர்ந்து தொண்டையில் சவ்வு ஒடுக்கு, உமிழ்நீர் மற்றும் வாந்தி இல்லாமல் குமட்டல், கவலை, குழப்பம் மற்றும் தலைச்சுற்றல் முதலியன.

மற்ற அம்சங்கள் குரல்பாகுபாடு, மூச்சிரைப்பு, நுரையீரல் வீக்கம், குறை இதயத் துடிப்பு அல்லது மிகை இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் சம்பந்தமான குறைபாடு, இரத்தத்தில் கூடுதல் சர்க்கரை, பெருமூளையில் நீர் வீக்கம், வலிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற அமில ஏற்றம்.

சுவாசம் கசப்பான பாதாம் வாசனையுடன் இருக்கும்.
சையனைடு விஷம் தள்ளாட்டம், நரம்புக் கோளாறு, கண்ணின் செயல்திறன் இழப்பு மற்றும் நரம்பு செவிடு.

அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.

தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.

கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.

சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.

உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.

மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை

உள்ளிழுத்தல்- தீயினால் பாதிக்கப்பட்டவரை மேலும் தீ படாமல் பாதுகாத்து 100% ஆக்ஸிஜன் கொடுத்து நல்ல தெளிவான சுவாசம் கொடுக்கவும்.

உட்கொள்ளுதல் – இரைப்பை கழுவல் செய்யவும்., சுவாசம் வழங்கவும். இதர மருந்துகள் கிடைக்கும் வரை 0.2 – 0.4 அமைல் நைட்ரைட் சுவாசம் கொடுக்கவும். சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 80 மிமீ க்கு கீழ் குறைந்தால், அமைல் நைட்ரேட் வழங்குவதை நிருத்தி, IV திரவத்தை கொடுக்கவும்.

இதர நச்சு முறிவுகள் :
-> 25% கொண்ட 50 மிலி சோடியம் தையோசல்பேட் கரைசல் (12.5 கிராம் ) IV 10 நிமிடத்திற்கு மேலாக கொடுக்கவும். (25 கிலோவிற்கு குறைவான உடல் எடை கொண்ட குழந்தைகளுக்கு 25% கொண்ட 1.65 மிலி/ கிலோ சோடியம் தையோ சல்பேட் கொடுக்கவும்.
-> 20 மிலி டைக்கோபால்ட் எடிட்டேட் (கெலோசைனர்) கரைசல் (300 மி.கிராம்) IV ஒரு நிமிடத்திற்கு மேலாக, தொடர்ந்து 50% டெக்ஸ்ட்ரோஸ் 50 மிலி IV (அ) 40%  ஹைட்ராக்சோ கோபாலோமின் கரைசல் 10 மிலி (4 கிராம்) IV 20 நிமிடத்திற்கு மேலாக மற்றும் 3% சோடியம் நைட்ரைட் கரைசல் 10 மிலி ( 300 மி. கிராம் ) IV 5- 20 நிமிடத்திற்கு மேலாக ( 25 கிலோவிற்கு எடை குறைவான குழந்தைகளுக்கு 3% சோடியம் நைட்ரைட் கரைசல் 0.33 மிலி/கிலோ)

சையனைடு விஷ பாதிப்பிற்கு மட்டும் டைக் கோபால்ட் எடிட்டேட் பயன்படுத்தவும். இல்லையெனில் கோபால்ட்டின் நச்சு ஆபத்தை ஏற்படுத்தும்.

 


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015