பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
  1. ஆர்கனோ பாஸ்பரஸ் பூச்சிக் கொல்லிகள்

    வரி
    சை எண்

    பூச்சிக் கொல்லி பெயர்

    நச்சின் அறிகுறிகள்

    முதலுதவி நடவடிக்கைகள்

    சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

    1. அசிபேட் லேசான நிலை பசியின்மை, தலைவலி, தலைச்சுற்றல், பலவீனம், கவலை, நாக்கு மற்றும் கண் இமைகளில் நடுக்கம், பார்வைக் கோளாறுகள், ஒடுக்கற்பிரிவு. மிதமான நிலை குமட்டல், உமிழ்நீர் வழிதல், கண்ணீர் வழிதல், வயிற்றுப் பிடிப்பு, வாந்தி, வியர்த்தல், மெதுவான துடிப்பு, தசை நடுக்கம், ஒடுக்கற்பிரிவு. கடுமையான நிலை வயிற்றுப் போக்கு, வீரியமற்ற கண்ணின் மணி, சுவாசித்தலில் சிரமம், நுரையீரல் வீக்கம், நீலம் பாய்தல், சுருக்குத் தசை கட்டுப்பாட்டு இழப்பு, வலிப்பு, கோமா மற்றும் இதய அடைப்பு. அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும். தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும். கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும். சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும். உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும். மருத்துவ உதவி :
    பாதிக்கப்பட்டவரை
    1. சுவாசக்குழல் பாதுகாப்பு
    2. அடைப்பற்ற சுவாசப்பாதை
    3. நோயாளியின் மூச்சுக்குழலுக்குள் குழைய் சொருகுதல் மற்றும் மூச்சொலி எழுதல்.
    4. இயந்திரத்தின் உதவியோடு நுரையீரலுக்கு ஆக்சிஜன் சுவாசம் வழங்குதல்.
    5. அட்ரோபினுக்கு முன் இதய இடக் கீழறை உதறல் துடிப்பை தடுக்க ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்தவும்.
    6. அட்ரோபின் முதியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான சுரப்பிகள் கட்டுப்படுத்தபடும் வரை 2-4 மில்லிகிராம் 15 நிமிடத்திற்கு ஒருமுறை வழங்கவும் மற்றும் அட்ரோபினிசேசன் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 0.1 மி.கிராம் (அ) 0.05 – 0.1 மி.கிராம்/ கிலோவை 15 நிமிடத்திற்கு ஒருமுறை வழங்கவும். கடுமையான விஷம், அட்ரோபினுக்கு சகிப்புத்தன்மையை வெளிபடுத்தும் மருந்தளவினை அதிகரிக்கலாம். மருந்துக்கு இடையேயான நேர இடைவெளியை அதிகரிக்கலாம். தொடர்ச்சியான உட்செலுத்துதல் தேவைப்படலாம். சுவாசக் கோளாறுகளை கட்டுப்படுத்த அட்ரோபினை பயன்படுத்தலாம். கிலைகோபைரோலேட்
    அட்ரோபினுக்கு மாற்று மருந்தாகும். 200 மிலி உப்புக்கரைசலில் 7.5 மி.கிராம் சேர்க்கவும். இக்கலவை சுவாசக் குழல் தொற்று கோளாறுகளை நீக்கும். பிராலிக்சோடைம் (2 PAM)
    48 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும். நிக்கோடினிக் (அ) மஸ்கரைன் விளைவிலிருந்து விடுவிக்கும். முதியவர்கள் -  1.2 கிராம் – i.v. 0.2 கிராம்/நிமிடத்திற்கு மிகாமல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20-50 மி.கிராம்/ கிலோ b.w.i.v 100 மிலி – யுடன் கலந்து 30 நிமிடத்திற்குள் உட்கொள்ளவும். பறிமுதல் கட்டுப்பாடு
    i) டையஜிபாம்
    முதியவர்கள் – 5- 10 நிமிடத்திற்கு ஒருமுறை 5-10 மி.கிராம் i.v., அதிகபட்சம் – 30 மி.கிராம்.
    குழந்தைகள் 5- 10 நிமிடத்திற்கு ஒருமுறை 0.2 – 0.5  மி.கிராம்/கிலோ  i.v., அதிகபட்சம் – 10 மி.கிராம்.
    ii) லொராஜிபம்
    முதியவர்கள் – 2- 4 மி.கிராம் i.v. 2- 5 நிமிடத்திற்குள், அவசியப்பட்டால் மீண்டும் உட்கொள்ளவும். அதிகபட்சம் 8 மி.கி – 12 மணி நேரத்திற்குள்.
    குழந்தைகள் முதியவர்களை போன்று – அதிகபட்சம் – 4 மி. கிராம் 15 வயதுக்குட்பட்ட வர்கள்  – 0.4 – 0.10 மி.கிராம்/ கிலோ i.v. . 2- 5 நிமிடத்திற்குள், அவசியப்பட்டால் மீண்டும் 0.05 மி.கிராம்/ கிலோ 10-15 நிமிடத்தில் கொடுக்கவும். அதிகபட்சம் 4 மி.கிராம். முரண்பாடுகள் :
         மார்பின், சக்சினைல் கோலைன், தியோபில்லைன், பீனோதையோசைன்ஸ் மற்றும் ரெசர்பைன்.
    2. அனிலோபோஸ்
    3. குளோர்வென்வின்போஸ்
    4. குளோர்பைரிபோஸ்
    5. டையஜினோன்
    6. டைகுளோரோவோஸ் (DDVP)
    7. டைமீத்தோயேட்
    8. எடிபென்போஸ்
    9. எதியோன்
    10. பெனிட்ரோதியோன்
    11. பென்தியோன்
    12. பார்மோதியோன்
    13. கிட்டாஜின்
    14. மாலத்தியான்
    15. மிதைல் பாரத்தியான்
    16. மோனோகுரோடோபோஸ்
    17. ஆக்சிடைமிட்டான் மிதைல்
    18. பென்தோயேட்
    19. போரேட்
    20. பாஸ்பாமிடான்
    21. போசாலோன்
    22. பிரிமிபோஸ் மிதைல்
    23. புரோபெனோ போஸ்
    24. புரோபெட்டம் போஸ்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015