அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: மா

டிப்லோடியா தண்டு அழுகல் நோய்: டிப்லோடியா நட்டலென்சிஸ்

அறிகுறிகள்:

  • பழக் காம்பின் அருகே உள்ள தசை பகுதி கருமை நிறத்தில் தோன்றும்
  • ஈரப்பத நிலையின் போது, கரும் புள்ளியுடன், வட்ட வடிவத்தில் காணலாம்
  • பேக்டினோலைடிக் மற்றும் செலுலோலைடிக் போன்ற நொதிகளால் மென்மையழுகல் நோய் தோன்றும்
  • பழத்தின் அதிகப் பகுதிகள் கருமையாகவும் மற்றும் மென்மையாகவும் மாறிவிடும்
  • புளிப்புத் தன்மைக் குறைந்துவிடும்

பரவுதல்:

  • பூஞ்சானால் பாதிக்கப்பட்ட செடிப் பகுதிகளின் மூலம் நோய் காரணிகள் பரவும்

பரவும் சூழ்நிலை:

  • 80% ஈரப்பத வெப்ப நிலையில் 31.5 அதிகபட்ச வெப்ப நிலையிலும் மற்றும் 25.90 குறைந்தபட்ச வெப்பநிலையிலும் நோய் பரவிவிடும்.

 

டிப்லோடியா தண்டு அழுகல் நோய்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015