முன்னுரை
தொற்றுத் தடைக்காப்பு என்பது அயல்நாட்டு பூச்சிகள் அல்லது நோய்கள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிருக்கு பரவாமல் தடுப்பது அல்லது அவைகள் பரவும் முன்பே முற்றிலுமாக அளிப்பது ஆகும். அதிக வளர்ச்சியுறாத நாடுகள் மற்றும் இதர நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் வலுவற்ற பொருளாதாரம் போன்றவற்றின் காரணமாக அயல்நாட்டு பூச்சி இனங்கள் அறிமுகமாகி சேதங்கள் ஏற்படுகின்றன. விவசாய வளர்ச்சி நலத்திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மூலம் தொற்றொதுக்கம் பூச்சிகளினால் அதிக ஆபத்துக்கள் ஏற்படுவதற்க்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. வலுவான தாவர நலச்சான்று சேவைகள் இல்லாமல் உலக நாடுகள் சந்தையில் தாராளமயமாக்குதலை பற்றி விவாதிக்க முடியாது.
|