பயிர் பாதுகாப்பு :: குரோட்டன்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

மாவுப்பூச்சி: பிளானோகாக்கஸ் லைலாசினஸ்

சேதத்தின் அறிகுறி:

  • இதன் தாக்கம் இலையின் அடிப்பகுதியிலும், இளம் குருத்துக்களின் கணுக்களிலும் காணப்படும்.
  • தாக்கப்பட்ட தாவரங்களில் இலைகள் உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • உடம்பில் உள்ள வெதிலில் வெள்ளை மாவுப் போன்ற படிவம் காணப்படும்.
  • சிறியதாகவும், மென்மையாகவும் காணப்படும்.
  • பெண்பூச்சி இறக்கையற்றதாகும், உடம்பு வெள்ளை நூலால் மூடப்பட்டிருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தேவையான நிழலை பேணுதல் வேண்டும்.
  • எறும்புகளில் கூடுகளை அழித்துவிட வேண்டும்.
  • குயினால்பாஸ் 1.5 சதவிதம்் (அ) மாலத்தியான் 5 சதவிதம் தெளிக்கவும்.
  • குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
  • கிரிப்டோலேமஸ் மான்டுசேரி பொறிவண்டை பாதுகாக்க வேண்டும்.
  • லெப்டோமேஸ்டிக்ஸ் டேக்டைலோபி ஒட்டுண்ணியை விடலாம்.
Croton

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015