பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைப்பேன் : மைக்ரோசெபலோதிரிப்ஸ் அப்டாமினாலில்
- இலைப்பேன்கள் மலர்க்கொண்டையை சேதப்படுத்தும்.
- பூவிதழ் மற்றும் அல்லி இதழ்களைச் சுரண்டி தின்று சேதத்தை உண்டாக்கும்.
- கடும் தாக்குதலின் போது பூவின் அனைத்துப் பாகங்களையும் தாக்கி சேதப்படுத்துகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
- நாற்றாங்காலில் கார்பரில் மற்றும் டைகோபால் கலந்த கலவையைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- சந்திரிகா, பெங்களூர் லோக்கல் எல்லோ டபுள், எம்-7, பங்கஜ் மற்றும் எல்லோ ஸ்டார் போன்றரகங்களை பயன்படுத்தவும்
- கிரீன்ஹவுஸ்ஸின் உள்ளேயும் வெளியேயும் நோய்தொற்றுயின்றி பராமரிக்கவும்
- மஞ்சள் மற்றும் நீல நிற பொறியை பயன்படுத்தவும்
- டைமீதோயேட் 30 EC அல்லது மாலத்தியான் 50 EC 1 மி.லி./லிட்டர்
|
|
|