பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சைப்புழு : ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா
சேதத்தின் அறிகுறிகள்
  • பூக்களை தின்று சேதப்படுத்தும்.
  • இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும்
  • முதிர்ந்தபுழுக்கள் பூவிதழ்களிகளை உன்னும்
  • இப்புழுக்கள் பூவிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின்பாதி பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும்.
பூச்சியின் விபரம்
  • முட்டை : பெண் அந்துபபூச்சி சொரசொரப்பான வெள்ளைநிற முட்டைகளை தனித்தனியே இளம் இலையின் மேற்பகுதியில் இடுகின்றது.
  • புழு : பச்சை மற்றும் பழுப்பு நிற வேறுபாடுகளை தோற்றுவிக்கும். வளர்த்த புழுக்கள் பச்சை நிறமாகவும் உடலின் பக்கவாட்டில் சாம்பல் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு : கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில், மண், இலை மற்றும் பண்ணைக் கழிவுகளில் காணப்படும்.
  • பூச்சி : பெண் அந்துப்பூச்சி வெளிர் பழுப்பு நிறமாக இருக்கும். ஆண் அந்துப்âச்சி வெளிர் பச்சை நிறத்தில் V - வடிவக் கோடுகள் இருக்கும்.
  • முன் இறக்கை : பழுப்பு நிற முன் இறக்கையில் V - வடிவக் கோடு இருக்கும்.
  • பின் இறக்கை : ஓரப்பகுதி அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • தாக்கப்பட்ட பூ மற்றும் வளர்ந்த புழுக்களையும் சேகரித்து அழிக்கவும்.
  • இனக்கவர்ச்சிப் பொறி ஹெலிæர் ஹெக்டேர்க்கு @15 வீதம் வைக்கவும்.
  • முட்டை ஒட்டுண்ணிப்பான ட்ரைக்கோகிராம்மா கைலோனிஸ் ஹெக்டேருக்கு @ 50,000 எனும் அளவில் வாரம் ஒரு முறையாக 6 முறை விடவேண்டும்.
  • கிரைசோப்பெர்லா கார்னியா எனும் இரை விழுங்கிப் âச்சிகளை நட்ட 30 - ம் - நாள் முதல் வாரம் ஒரு முறை @ 50,000 முட்டைகள் அல்லது புழுக்களை விட வேண்டும்.
  • ஹெலிகோவெர்பா நிäக்ளியர் பாலி ஹெட்ரோசிஸ் வைரஸ் [எச்.எ.என்.பி.வி ] திரவத்தினை ஹெக்டேருக்கு @500 புழு சமன் அளவுடன் பருத்தி விதை எண்ணெய் 300 கிராம் அளவில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்கவும்.
  • கார்பரில் 2 கிராம்/லிட்டர் அல்லது பெசில்லஸ் துருஞ்ஐியென்சிஸ் @ 2 கிராம்/லிட்டர் அளவில் தெளிக்கவும்.

 

 

 



   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015