வாஸ்குலர் வாடல் நோய்
அறிகுறிகள்:
- இலைகள் மஞ்சளாதல், பின்னோக்கிக் காய்தல்.
- தனி இலையில் முதிரில் அறிகுறிகள் தோன்றும். பின் உடனடியாக வாடத்தொடங்கும். மங்கிய பச்சை நிறத்துடன் தோன்றும்.
- வாடல் அறிகுறிகள் மேலும், கீழும் பரவும். வறண்ட வானிலையின் போது வாட ஆரம்பிக்கும்.
- தண்டுகளும், இலைகளும் பழுப்பு நிறத்தில் மாறி பின் மடியும். பாக்டீரியா சைலம் குழாய்கள் வழியாக பரவும். தொடர்ந்து முழுச்செடியும் சுருங்கி, மடிந்து விடும்.
வேர்களை தாக்கும் அறிகுறிகள்:
- தாக்கப்பட்ட தண்டுப் பகுதியிலிருந்து வெள்ளை நிற கசிவு வடிந்துக் கொண்டிருக்கும்
- இந்த பாக்டீரியல் கசிவு நுண்ணிய, பளபளப்பான நூல் போன்று உருவாகி, கத்தீ (அ) கையைக் கொண்டு அழுத்தும்போது. 1 செ.மீ. நீளத்திற்கு வெளியே வரும்
- வெட்டப்பட்ட 2 தண்டுகளை ஒன்றாகக் கொண்டு வரும் போது, அழுத்தினால், பின் தனித்தனி இழைகளாகப் பிரியும்
- நோயற்ற செடியின் சாறு நீர் போன்று, இழை போன்று இருக்காது, சில சமயங்களில், இந்த சோதனையை செய்துப் பார்ப்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும்
- வயலில் அறிகுறிகளை கண்டறிவதற்கு இந்த முறை பயன்படுகிறது. இந்த சோதனை வெள்ளரி மற்றும் முலாம் பழம் போன்றவைகளில் ஒரளவிற்கு உதவி செய்யும்
- பழங்களிலும் அறிகுறிகள் காணப்படாது. சிறிய நீரில் ஊறிய திட்டுகள் மேற்புறத்தில் காணப்படும். இந்த திட்டுக்கள் ஒரே மாதிரியாக பளபளப்பான அழுகும் புள்ளிகளாக பழத்தின் மீது தோன்றும்.
கட்டுப்பாடு:
- அதிகளவில் பயிரிடும் வயல்களில் பூச்சிக் கொல்லிகள் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். கார்பைரில், மாலத்தியான் (அ) ரோட்டினான் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்
- வசந்த காலத்தில் வண்டுகள் முதலில் தோன்றும் போது தெளிக்க வேண்டும் செடிகள் முளைக்க ஆரம்பித்தவுடனேயே, கட்டுப்படுத்த வேண்டும்
- கட்டுப்படுத்தாவிட்டால் ஒன்று முதல் நான்கு தலைமுறை வண்டுகள் கூட இருக்கும். அதனால் வாராவாரம் பூச்சிக் கொல்லிகள் தெளிக்க வேண்டும்.
|
|