பயிர் பாதுகாப்பு :: வெள்ளரிகாய் பயிரைத் தாக்கும் நோய்கள் |
சொறி நோய்
அறிகுறிகள்:
- கொடியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தப் புள்ளிகள் காணப்படும்
- முதன்முதலில், லேசான நீரில் ஊறிய புள்ளிகள் (அ) இளம் பச்சை நிறப்புள்ளிகள் இலைகளில் தோன்றும்
- எண்ணற்றப் புள்ளிகள் நரம்புகளுக்கு இடையில் தோன்றும் அதேபோல், நீளமான புள்ளிகள் காம்புகள் மற்றும் தண்டுகளில் தோன்றும்
- மெதுவாக, இந்தப் புள்ளிகள் சாம்பல் நிறத்திலிருந்து வெள்ளை நிறமாக மாறும்
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறப் புள்ளிகளுடன், குட்டை வளர்ச்சியுடனும் காணப்படும்
- பழ வளர்ச்சியின் அனைத்து நிலைகளையம் தாக்கும். இளம் பழங்களை அதிகளவில் தாக்கும். பழங்களில் சாம்பல் நிற, சற்றே உள்ளே அமிழ்ந்த 2 மி.மீ விட்டமுடைய புள்ளிகள் காணப்படும்
கட்டுப்பாடு:
- 4 வருடத்திற்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்ய வேண்டும்
- நோய் எதிர்ப்பு இரகங்களான ஹைமோர், மெரைன் 2 பயிரிட வேண்டும்
- மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்
|
|
|