பயிர் பாதுகாப்பு :: பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழ ஈ: பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே, சிலியேட்டஸ், ஜீனேட்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • கால்களற்ற புழுக்கள் காய்களின் உட்பகுதியில் உள்ள திசுக்களை சாப்பிடும்.
  • காய்களிலிருந்து பழுப்பு நிறத் திரவம் வடியும்.
  • காய்கள் உருக்குலைந்து காணப்படும்.
  • காய்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும்
பாதிக்கப்பட பழம் பழத்தினிடைய பிளவு கோந்து வெளிப்படுதல்
உள் திசுக்கள் பழுப்படைதல் வளர்ச்சி குன்றிய பழம்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: காய்களின் மீது பழ ஈக்கள் தனித்தனியாக வைக்கவும்
  • புழு: கால்களற்ற அழுக்கடைந்த வெண்ணிறத்தில் இருக்கும்.
  • கூட்டுப்புழு: முழுவளர்ச்சியடைந்த புழுக்கள் மண்ணில் விழுந்து கூட்டுப்புழுவாக மாறுகிறது
முதிர்பூச்சி

பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டே: வெண்ணிற இறக்கைகள் மீது பழுப்பு மற்றும் சாம்பல் நிறப் புள்ளிகள் காணப்படும்
பே. சியேட்டஸ்: செம்பழுப்பு நிற உடல் பேக்ட்ரோசீரா குக்கர்பிட்டேவைவிட சிறியது
பே. ஜீனேட்டா: மஞ்சள் நிற உடல், இடுப்புப்பகுதியில் 3வது கண்டத்தில் மஞ்சள்நிற பட்டை இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட அழுகிய காய்களைப் பறித்து அழித்து விடவேண்டும்
  • உட்பரவுல் உள்ள இடங்களில், விதைக்கும் காலத்தை மாற்றி அமைத்து தாய்ஈக்களின் நடமாட்டம் வறண்ட வெப்பமான காலங்களில் குறைவாகவும், மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்
  • கூட்டுப்புழுக்களை உழவு செய்து மண்ணிலிருந்து வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கலாம்
  • பீர்க்கன் காயை கவர்ச்சிப்பயிராக பயிரிட்டு அதன் இலையின் அடியில் சேரும் ஈக்களை கார்பரில் 0.15 சதம் அல்லது மாலத்தியான் 0.1 சதம் தெளித்து அழிக்கலாம்
  • சிட்ரானல்லா எண்ணெய், நீலகிரிமர எண்ணெய், வினிகர் (அசிட்டிக் அமிலம்) மற்றும் லாக்டீக் அமிலம் இவற்றை கவர்ச்சிப்பொருளாக வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • நச்சு உணவு/பொறி: மெத்தைல் யூஜினால் + மாலத்தியான் இரண்டையும் சம அளவு கலந்து (1:1) ஒவ்வொரு பாலித்தீன் பைகளில் 10 மி.லி அளவுக்கு எடுத்து நச்சுப்பொறியாக ஹெக்டேருக்கு 25 வைக்க வேண்டும்
  • பாலித்தின் பைகளில் 5 கிராம் கருவாடு + 0.1 மி.லி டைகுளோர்வாஸ் வைத்து பைகளில் 6 துளையிட்டு பொறியாக பயன்படுத்தி ஹெக்டேருக்கு 5 வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • ஒவ்வொரு வாரமும் டைகுளோர்வாஸ் சேர்க்க வேண்டும், 20 நாட்களுக்கு ஒரு முறை காருவாட்டை மாற்ற வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015