தண்டு துளைப்பான் (அ) கண்ணாடி இறக்கையுடைய அந்துப்பூச்சி : மெல்லிட்டியா யூரிடியான்
சேதத்தின் அறிகுறிகள்:
- புடலைத் தண்டில் புழு குடைந்து உண்பதால் தண்டில் வீக்கங்கள் காணப்படும்.
|
|
அறிகுறிகள் |
பூச்சியின் விபரம்:
- புழு : வெள்ளை நிறத்தில் இருக்கும்.
- கூட்டுப்புழு : மண் பட்டுக்கூட்டில் கூட்டுப்புழு பருவத்திற்கு மண்ணில் செல்லும்.
- அந்துப்பூச்சி : கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்ட பழுப்புநிற அந்துப்பூச்சி.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- தாக்கப்பட்ட செடிகளை புழுக்களடன் சேகரித்து அழிக்கவும்.
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் :
- மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
- டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
- மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
|