புடலை காவடிப்புழு: ப்ளுசியா பெப்போனிஸ்
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் கடித்து தின்னப்பட்டிருக்கும்
- இலைகளை சுருட்டி அதனுள் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை : வெள்ளைநிற உருண்டை வடிவ முட்டையை தனித்தனியாக இளம் இலைகளில் இடும்.
- புழு : உடல் வெண்மை கலந்து பச்சை நிறத்துடன் வெண்ணிறக் கோடுகளுடன் காணப்படும். உடலின் பின்பகுதி உயர்ந்துக் காணப்படும்.
- கூட்டுப்புழு : சுருட்டிய இலையில் மெல்லிய áலாம்படைக்குள் கூட்டுப்புழு இருக்கும்.
- பூச்சி : அந்துப்பூச்சி பழுப்பாக பளப்பளப்பாக மின்னும் முன் இறக்கையுடையது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் :
- மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
- டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
- மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
|