பயிர் பாதுகாப்பு :: பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பூசணி இலைப்புழு: டயஃபேனியா இண்டிகா
சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் பச்சையத்தை சுரண்டி தின்று சேதப்படுத்தும்
  • இலைகளை சுருட்டி மெல்லிய நூலாம்படையில் இருந்துக் கொண்டு சாப்பிடும்.
  • பூக்களை சாப்பிட்டு சேதப்படுத்தும் மேலும் காய்களில் துளையிட்டு சேதப்படுத்தும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை : இலையின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ முட்டையிடும்.
  • புழு : பச்சை நிறத்தில் இருக்கும், உடலின் மேற்பகுதியில் இரண்டு வெண்ணிறக்கோடுகள் இருக்கும்.
  • கூட்டுப்புழு : இலைகளில் பட்டுக்கூட்டினில் கூட்டுப்புழு பருவத்திற்கு செல்லும்.
  • பூச்சி : வெண்ணிற இறக்கையின் ஓரங்களில் பழுப்பு நிறப்பட்டைகள் காணப்படும். தாய் அந்துப்பூச்சியின் உடலின் முடிவில் ஆரஞ்சு நிற முடிக்கற்றையுடன் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் :
    • மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
    • டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
    • மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்

 

புழு பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015