சுரைக்காய் இறகு பூச்சி: ஸ்பீனார்ச்சாஸ் காஃபர்
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளில் துளையிட்டு சாப்பிடும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை : முட்டைகளை மொட்டுகளிலோ அல்லது இளம் காய்களிலோ தனித்தனியே இடும்.
- புழு : மஞ்சள் கலந்த பச்சை நிற புழுவின் உடலில் நீண்டமுள் போன்ற கிளைத்தெழும் ரோமங்கள் இருக்கும்.
- கூட்டுப்புழு : பச்சை கலந்த பழுப்புநிற கூட்டுப்புழு.
- பூச்சி : அந்துப்âச்சி இளம்பழுப்பு நிறமானது. முன் இறக்கை இரண்டு பகுதியாகவும், பின் இறக்கை மூன்று பகுதியாகவும் பிளவுப்பட்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- புழுக்களை சேகரித்து அழிக்கவும்.
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் :
- மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
- டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
- மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
|
|
பூச்சி |
|