பயிர் பாதுகாப்பு :: பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலைத்துளைப்பான்: லிரியோமைசா ட்ரைஃபோலியை

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்
  • நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்

பூச்சியின் விபரம்:

  • புழு: பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள்
  • கூட்டுப்புழு: வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும்
  • முதிர்பூச்சி: வெளிர் மஞ்சள் நிற ஈக்கள்

கட்டுப்படுத்தும் முறை:

  • துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்
  • வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்



இலைத்துளைப்பான் முதிர்பூச்சி






முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015