பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
அந்தராக்நோஸ்: கொலிட்டோட்ரைக்கம் லேகிநேரியம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • முதிர்ச்சியடைந்த இலைகளில்,  நீர் நனைத்த மஞ்சள் புள்ளிகள் தோன்றி பின்பு வேகமாக பெரிதாகி  சிவப்பு  பழுப்பு நிறமாக மாறிவிடும்.
  • புள்ளிகள் வட்டம் முதல் கோண வடிவில் இருக்கும்
  • பின்னர், புள்ளிகள் ஒன்றாக கூடி  இலை  கருகலை ஏற்படுத்தும்
  • இலைக்காம்பு மற்றும் தண்டுகளில்- பழுப்பு முதல் கருப்பு நிற நீண்ட வடிவ பிளவுகள் தோன்றும்.
  • தர்பூசணி, பரங்கி மற்றும் வெள்ளரி போன்ற காய்களை நோய் தாக்கும்
  • ஸ்குவாஷ் மற்றும் பூசணிக்காய் கிட்டத்தட்ட நோய் எதிர்ப்பு கொண்டிருக்கும்
  • முதிர்ச்சியடையாத பழம் கருப்பு நிறமாக மாறி சுருங்கி  இறந்துவிடும்.
  • வட்ட, நீர் நனைத்த புள்ளிகள் பழைய பழங்களில் தோன்றும்
  • முதிர்ச்சியடைந்த பழங்களில் மூழ்கிய புள்ளிகள் கரும் பச்சை முதல் பழுப்பு நிறமாக மாறிவிடும்
  • ஈரமான நிலைமைகளில்  மூழ்கிய புள்ளிகளில் இருந்து இளஞ்சிவப்பு வித்துக்கள் வெளியே வரும்.
தர்பூசணியில் நீர் நனைத்த புள்ளிகள் வளையங்கள் தர்பூசணியில வெள்ளை பூசண சுரைக்காய்யில் நீர் நனைத்த புள்ளிகள
நோய் காரணி:
  • மைசிளிய்யம் குறுக்கு மற்றும் நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு, கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • செப்டே- பழுப்பு தடித்த சுவர் கொண்டு 2-3 நீண்ட தடுப்புச்சுவர் கொண்டு இருக்கும்.
  • கோநிடியோ கண்ணாடி போன்று, ஒரு அணுவை கொண்டு முட்டை வடிவ அல்லது நீள்சதுர வடிவில் இருக்கும்

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • மண் மற்றும் விதை மூலம் பரவும்
  • பூஞ்சைகள் பழைய சுரைக்காய் கொடிகள் அல்லது  களைகளில் 5 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும்
  • பரவல் - ஓடும் தண்ணீர், தொழிலாளர்கள் மற்றும் பைமிலியா வகை பூச்சிகளின் மூலம் பரவும்.

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • சூடான மற்றும் ஈரமான நிலைகள்
  • வெப்பநிலை- 25 °C, ஈரப்பதம்- 100 %
கட்டுப்படுத்தும் முறை:
  • செடி, கொடி கழிவுகளை அழிக்கவும்
  • விதைகளை 57.2 °C சுடு நீரில்  20 நிமிடம் நேர்த்தி செய்யவும்
  • விதைகளை திறம், கார்பெண்டேஜிம் அல்லது மேன்கொசப் 2 கிராம்/ கிலோ கொண்டு நேர்த்தி செய்யவும்.
  • கார்பன்டசிம் 0.1%, மேன்கோசெப் 0.2%, டைபோலாட்டன் 0.2% வாராந்திர இடைவெளியில் தெளித்தல். 
  • பழம் நனைத்தல்- 120 பிபிஎம் குளோரின் கொண்டு கழுவி தண்ணீர் கலவையில் 5  நிமிடங்கள் பழங்களை நனைக்கவும்
  • தர்பூசணி எதிர்ப்பு சக்தி வகைகள்- பிளாக் ஸ்டோன், கொங்கோ, டைமண்ட, சார்ல்ஸ்டோனே.
Source of Images:
http://imgkid.com/anthracnose-of-cucurbits.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015