பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
நீர் வடியும் தண்டுக் கருகல் மற்றும் கருப்பு அழுகல் நோய்: டைடிமேல்லா ப்ரயோனியே
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இலைகளில் நீர் நனைத்த புண்கள் மற்றும்  நரம்பு இடைவெளியில் நசிவு ஏற்படும்
  • புண்களை சுற்றி மஞ்சள் ஒளிவட்டம் சூழப்பட்டு இருக்கும் மற்றும் புள்ளிகள் காயும்   போது விரிசல் அடைந்துவிடும்
  • தண்டுகளில் நீர் நனைத்த புண்கள் பழுப்பு நிறமாக தோன்றும்
  • தண்டின் புள்ளிகள் பொதுவாக சிவந்த-பழுப்பு அல்லது கருப்பு நிறமாக பசை வெளிவரும்

கருப்பு அழுகல்

  • பாதிக்கப்பட்ட பகுதியில் - பழுப்பு மற்றும் நனைத்த நிறத்தில் அழுகல் தோன்றும்
  • மேம்பட்ட நிலைகளில் பட்டை கருப்பு மற்றும் ஆழமாக சுருக்கம் விழுந்து காணப்படும்
  • பழத்தின் பெரும் ஒழுங்கற்ற பகுதிகளில் தனித்துவமான வெண்கல நிறம் கொண்ட பொதுமைய வளையங்கள் காணப்படும்   
ஸ்குவாஷ் கருப்பு அழுகல் நோய்
ஸ்குவாஷ நீர் வடியும் தண்டுக் கருகல் நோய தர்பூசணியில கருப்பு அழுகல் நோய தர்பூசணிநீர் வடியும் தண்டுக் கருகல் நோய
வெள்ளரியில் பழுப்பு பசை வெள்ளரியில உள் நிறம்மாறுதல் மற்றும் அழுகல வெள்ளரி கருப்பு அழுகல நோய
நோய் காரணி:
  • பிக்க்நீடியாவில் இருந்து கொநிடியாக்கள் உருவாகிறது. இவைகள் நோயை பரவ செய்கிறது.
  • இளம் பிக்க்நீடியாக்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். வயதுடைய பிக்க்நீடியாக்கள் கருப்பு நிறத்தில் இருக்கும்.
  • கொநிடியா- குறுகிய மற்றும், உருளை வடிவத்தில், வழக்கமாக ஒரு இடைப்பகுதியுடன் ஒரு உயிரணு கொண்டு இருக்கும்.

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • மண் மற்றும் விதை மூலம் பரவும்
  • உறங்கும் மைசிலியாவாக அல்லது க்லாமிடோச்போராக உயிர் வாழ்கிறது
  • ஈரமான நிலைகளின் கீழ், மழைத்துளி மூலம் பரவுகிறது

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • ஈரப்பதம்- 85 %
  • உகந்த வெப்பநிலை- தர்பூசணி 23.9 °C, முலாம் பழம் 39 °C
கட்டுப்படுத்தும் முறை:
  • நோயற்ற விதைகளை பயன்படுத்துவது
  • அனைத்து சுரைக்காய் இனக் காய்கள் கொண்டு 2 ஆண்டு பயிர் சுழற்சி
  • சுகாதாரமான தோட்டம்
  • பூசண கொல்லிகள்- க்லோரோதாலனில், மேன்கோசெப் மற்றும் பெநோமில்
  • சுரைக்காய் இனக் காய்கள்- 10 °C அல்லது முன் குளிர்ந்த இடத்தில் சேமிக்கவும்
Source of Images:
http://content.ces.ncsu.edu/gummy-stem-blight-and-phoma-blight-on-cucurbits/
http://www.plantmanagementnetwork.org/elements/view.aspx?ID=6130
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Cucurbit/Gummy/GSBfs4.htm
www.omafra.gov.on.ca/english/crops/facts/09-051w.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015