பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தண்டு துளைப்பான்: கைலோ பார்டெலஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- நடுக்குருத்து காய்ந்து பின்னர் உதிர்ந்துவிடும்
- இலைகணுக்களில் துளையிட்டு செல்வதால் சிவப்பாக காணப்படும்
- தண்டின் கணுப்பகுதியில் துவாரங்கள் காணப்படும்
- வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளில் இணையாக துவாரங்கள் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டைகள் தட்டையாகவும், இலைக்கு அடியில் கும்பலாகவும் முட்டையிடும்
- புழு: புழுக்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், தலைப்பகுதி பழுப்பு நிறமாகவும் காணப்படும்
- பூச்சி: அந்துப்பூச்சி வைக்கோல் நிறமாக காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- அறுவடை செய்த உடனே மக்காச்சோளத் தட்டைகளையும் சேர்த்து நிலத்தை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- விளக்குப்பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
- கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை மணலுடன் (50 கிலோ) கலந்து வீசவும்
- போரேட் 10 G 8 கிலோ
- கார்போபியூரான் 3 G 17 கிலோ
- கார்பரில் 50 WP 1 கிலோ
|
|
புழு |
|
அந்துப்பூச்சி |
|
|